வாடிவாசல், வடசென்னை- 2 பற்றிய அப்டேட்டை கூறிய வெற்றிமாறன்… இதை எதிர்பாக்கலையே…

Published:

கடலூரில் பிறந்து வளர்ந்தவர் வெற்றிமாறன். இவரது தந்தை கால்நடை விஞ்ஞானி மற்றும் இவரது தாயார் பிரபலமான நாவலாசிரியர் ஆவார். லயோலா கல்லூரியில் படித்த வெற்றிமாறன் தான் படிக்கும் போதே திரைப்படத்தில் தனக்கு இருந்த நாட்டத்தை அறிந்து கொண்டார். இயக்குனர் மகேந்திரனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் வெற்றிமாறன்.

தமிழ் சினிமாவில் வெற்றிமாறன் திரைப்பட இயக்குனர் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளராகவும் பணிபுரிந்துள்ளார். 2007 ஆம் ஆண்டு தனுஷை வைத்து பொல்லாதவன் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் வெற்றிமாறன். இந்த படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இவர் அந்த படத்தில் காட்டி இருக்கும் பல்சர் பைக் இளைஞர்களால் ஈர்க்கப்பட்டு அந்த காலகட்டத்தில் பெரும்பாலான பல்சர் பைக்கைகள் விற்பனை ஆயின.

அதைத்தொடர்ந்து மறுபடியும் தனுஷை வைத்து 2011 ஆம் ஆண்டு ஆடுகளம் படத்தை இயக்கினார் வெற்றிமாறன். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்று ஆறு தேசிய திரைப்பட விருதுகளை வென்றது. நடிகர் தனுஷின் கேரியரில் முக்கியமான இடத்தை ஆடுகளம் திரைப்படம் பிடித்தது என்றே சொல்லலாம்.

2012 ஆம் ஆண்டு வெற்றிமாறன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தொடங்கினார். தன் தயாரிப்பு கம்பெனியின் கீழ் 2013 ஆம் ஆண்டு உதயம் NH4, நான் ராஜாவாக போகிறேன், 2015 ஆம் ஆண்டு காக்கா முட்டை ஆகிய திரைப்படங்களை தயாரித்தார். இதில் காக்காமுட்டை திரைப்படம் தேசிய திரைப்பட விருதுகளை வென்றது.

இயக்குனராக அடுத்ததாக வெற்றிமாறன் 2016 ஆம் ஆண்டு விசாரணை 2018 ஆம் ஆண்டு வடசென்னை ஆகியவற்றை இயக்கி வெற்றி படங்களை தயாரித்து நட்சத்திர அந்தஸ்தை பெற்று முன்னணி இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் உள்ளார் வெற்றிமாறன்.

வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை திரைப்படம் வெற்றி பெற்றதனால் அதனது இரண்டாம் பாகத்தை பற்றி மக்கள் அவரிடம் பொது நிகழ்ச்சிகளில் கேட்டுக்கொண்டே வந்தனர். அதேபோல் வெற்றிமாறன் சூர்யா உடன் இணைந்து வாடிவாசல் என்ற திரைப்படத்தை இயக்கப் போவதாக வெகு நாட்களாக தகவல்கள் வெளியாகி வந்தன. அதைப்பற்றி தற்போது ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெற்றிமாறன் அப்டேட் கொடுத்துள்ளார்.

அவர் கூறியது என்னவென்றால் ரொம்ப நாட்களாகவே நான் ரசிகர்களை காக்க வைத்து விட்டேன். இனி என்னுடைய அடுத்த வேலை அடுத்த படம் நான் எடுக்கப் போவது வாடிவாசல் தான். அதேபோல் வடசென்னை பாகம் 2 எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. விரைவில் அதுவும் வரும் என்று கூறியுள்ளார் வெற்றிமாறன்.

மேலும் உங்களுக்காக...