அர்ஜுன் நடித்து வெற்றிகரமாக ஓடிய படத்தின் இரண்டாம் பாகத்தை அவரே தயாரித்து இயக்குகிறாராம்… ஹீரோ யார் தெரியுமா…?

Published:

கன்னட நடிகர் சக்தி பிரசாத் அவர்களின் மகன்தான் நடிகர் அர்ஜுன் சர்ஜா. இவரின் இயற்பெயர் ஸ்ரீனிவாசா சர்ஜா என்பதாகும். அர்ஜுன் இளம் வயதில் முதலில் போலீஸ் அதிகாரி ஆக வேண்டும் என்று நினைத்துள்ளார். பின்னர் 1973 ஆம் ஆண்டு புரூஸ்லீயின் என்டர் தி டிராகன் ஆல் ஈர்க்கப்பட்டு தனது 16 வயதில் கராத்தே பயிற்சியை தொடங்கி அதில் பிளாக் பெல்ட் பெற்றார் அர்ஜுன்.

அர்ஜுன் தமிழ் சினிமாவில் பணியாற்றும் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆவார். இவர் தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படம் களிலும் மலையாளம் இந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவரின் படங்களில் ஆக்சன் காட்சிகள் அதிகமாக இருப்பதால் இவர் தமிழக மக்களால் ஆக்ஷன் கிங் என்று செல்லமாக அழைக்கப்பட்டார்.

சுமார் 120க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அர்ஜுன் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து ரசிகர்களை கவர்ந்த சில தென்னிந்திய நடிகர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அர்ஜுன் 12 படங்களை இயக்கியுள்ளார் மற்றும் பல படங்களை தயாரித்து விநியோகித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1984 ஆம் ஆண்டு ‘நன்றி’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அர்ஜுன் 1993 ஆம் ஆண்டு ‘ஜென்டில்மேன்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திருப்புமுனையை பெற்றார். ஜென்டில்மேன் திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றதோடு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது கிடைத்தது. அடுத்ததாக தொடர்ந்து ஜெய்ஹிந்த், கருணா, குருதிப்புனல் போன்ற தேசிய பற்று உடைய பல படங்களில் நடித்து பிரபலமானார்.

அர்ஜுன் நடித்து 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஏழுமலை. இத்திரைப்படத்தை இயக்கியது அர்ஜுன் அவர்கள்தான் என்று பெரும்பாலானோர்க்கு தெரியாது. இந்த திரைப்படத்தில் அர்ஜுனுடன் இணைந்து சிம்ரன், மும்தாஜ், கஜாலா, விஜயகுமார், ஆஷிஷ் வித்யார்த்தி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது.

அர்ஜுனுக்கு மொத்தம் இரண்டு மகள்கள். அதில் மூத்த மகளை தமிழ் சினிமாவின் குணச்சித்திர நடிகர் ஆன தம்பி ராமையாவின் மகனான உமாபதி ராமையா திருமணம் செய்து கொண்டுள்ளார். சமீபத்திய செய்தி என்னவென்றால் அர்ஜுன் இயக்கி நடித்து வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படமான ஏழுமலை திரைப்படத்தின் பாகம் 2 உருவாக இருக்கிறது ஆகவும் ஏழுமலை பாகம் 2 திரைப்படத்தை அர்ஜுன் தானே தயாரித்து இயக்க உள்ளதாகவும் அந்த திரைப்படத்தில் அவரின் மருமகனான உமாபதி ராமையா ஹீரோவாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் உங்களுக்காக...