மெட்டுக்குப் பாட்டு போல் பாட்டுக்குத் தான் மெட்டு என்ற பாணியைக் கடைப்பிடித்த இசைச் சக்கரவர்த்தி கே.வி.மகாதேவன்!

By John A

Published:

தினசரி நாம் கேட்கும் திரையிசை பக்திப் பாடல்களின் வழியாக இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருப்பவர் இசைச் சக்கரவர்த்தி கே.வி.மகாதேவன். தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்தில் கதாநாயகர்களே இசையமைத்துப் பாடி, நடித்து வந்த வேளையில் தனியாக இசைச் சாம்ராஜ்ஜியத்தை ஆரம்பித்து எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், தேவா உள்ளிட்ட ஜாம்பவான்களுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்தார் கே.வி. மகாதேவன்.

1942-ல் மனோன்மணி என்ற படத்தில் துணை இசை அமைப்பாளராக அறிமுகமான கே.வி. மகாதேவன் பெரிய வாய்ப்புகள் ஏதுமின்றித் தவித்தார். பின்பு 1954 ம் ஆண்டு புதிய வாய்ப்புகள் உண்டான வாய்ப்புகள் 1990 -ம் ஆண்டு ‘முருகனே சரணம்’ என்ற படத்துடன் நிறைவு பெற்றது. இதற்கிடையில் இவர் இசை அமைத்த படங்களின் எண்ணிக்கை 1,500. இந்தச் சாதனையை இனி எவராலும் எந்த காலத்திலும் தொட முடியாது. எம்.ஜி.ஆர் படங்களின் ஆஸ்தான இசையமைப்பாளராக நெடுங்காலம் பணியாற்றியவர்.  ஒவ்வொரு வாரமும் இவர் இசையமைத்த படங்கள் ஏதாவது ஒன்று வந்து கொண்டே தான் இருந்தது.

கடைசி வரை மனோரமாவின் நடிப்பைப் பாராட்டாத தாய்… லேடி சிவாஜிக்கே இப்படி ஒரு நிலைமையா?

பல பிரபல திரை இசையமைப்பாளர்கள் தங்களது பெரும்பாலான பாடல்களுக்கு ‘மெட்டுக்குப் பாட்டு’ எனும் வகையில்தான் இசை அமைப்பது வழக்கம். அதாவது இசைக்குத் தகுந்தபடி பாடல் வரிகளை எழுத வேண்டும். ஆனால் இதில் கே.வி.மகாதேவன் ,இதற்கு நேர்மாறானவர். கிட்டத்தட்ட தனது அனைத்துத் திரைப்பட பாடல்களுக்கும் வரிகள் எழுதிய பிறகுதான் அவற்றுக்கு ஏற்றவாறு இசையமைத்திருக்கிறார்.

காலத்தால் அழிக்க முடியாத பல காவியப் பாடல்களைத் தன் இசையமைப்பில் அளித்தவர் கே.வி.மகாதேவன். ஆனால், அவர் தன்னைப்பற்றி வெளி உலகத்துக்கு மிகமிகக் குறைவாகவே வெளிப்படுத்தியிருக்கிறார். பேட்டிகளுக்கு அவர் ஒப்புக் கொண்டதில்லை என்றே கூறிவிடலாம்.

சம்பூர்ண ராமாயணம், திருவிளையாடல், கந்தன் கருணை, திருவருட்ச்செல்வர், சரஸ்வதி சபதம் என தமிழிலும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளிலும் பக்தி மணம் கமழ இசை ராஜ்ஜியமே நடத்தியவர். இப்படிப்பட்ட மாமேதைக்கு 1967-ம் ஆண்டு முதல் விருது கிடைத்தது. அதன்பின் சங்கராபரணம் படத்துக்காகவும் இவருக்கு தேசிய விருது கிடைத்தது. இவரின் இசைப் பயணத்தில் அதிகமாக இடம் பிடித்தது பக்தி படங்களே. சுமார் அரை நூறாண்டுகள் இசை உலகின் சிம்மமாகத் திகழ்ந்தவர் கேவிஎம் அவர்கள்.

மேலும் உங்களுக்காக...