20 வருடத்தில் 80 படங்களைத் தொட்ட லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா?

Published:

தமிழ் சினிமாவில் ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா தற்பொழுது மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பழமொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தென்னிந்திய திரை உலகின் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா திரைப்படம் ஒன்றிற்கு பத்து கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து நயன்தாரா நடிகர் கமலுடன் இணைந்து நடிக்கும் மனிதர் தனம் படத்திற்கு 12 கோடி வரை சம்பளம் பேசி வருவதாக சமீபத்திய தகவல் வெளியாகியிருந்தது.

 அதே நேரத்தில் திரைப்படங்களுக்கு இணையாக சொந்த தொழிலில் ஆர்வம் காட்டி வரும் நடிகை நயன்தாரா 9ஸ்கின் என்னும் அழகு சாதன பொருட்கள் தயாரிப்பில் வெற்றி நடை போட்டு வருகிறார். இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட நயன்தாரா இரட்டை ஆண் குழந்தைகளுக்கு அம்மாவாகவும் மாறி உள்ளார்.  சமீபத்தில் தனது 39 வது பிறந்த நாளை கொண்டாடிய நடிகை நயன்தாரா தன் கணவன் மற்றும் இரட்டை குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்தார்.

இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக மாறிய  நயன்தாராவின் சினிமா மார்க்கெட் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சமீபத்தில்  நயன்தாரா மற்றும் ஜெயம் ரவி நடித்த இறைவன் திரைப்படம் வெளியானது. அதைத் தொடர்ந்து நயன்தாராவின் 75வது திரைப்படம் ஆன அன்னபூரணி திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனராக இருந்த நிலேஷ் கிருஷ்ணா  இயக்கும் இந்த படத்திற்கு  இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். மேலும் பெண்களை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் சத்யராஜ், ஜெய், சச்சு, ரேணுகா என  பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

 இந்த திரைப்படத்தை தொடர்ந்து தயாரிப்பாளர் எஸ்.சஷிகாந்த் தனது 23வது  திரைப்படமான டெஸ்ட் திரைப்படத்தில்  இயக்குனராக  அறிமுகமாகியுள்ளார்.  இந்த படத்தில் நடிகை நயன்தாரா மற்றும் மாதவன் ஸ்ரீகாந்த் என பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தை தொடர்ந்து பிரபல யூடியூபர் டியூடு விக்கி இயக்கும் மண்ணாங்கட்டி சின்ஸ் 1960 என்ற படத்தில் நடிகை நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கார்த்தியின் சர்தார் படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளது  குறிப்பிடத்தக்கது. சீன் ரோல்டன்  இசையில் உருவாகும் இந்த படத்தில்  நடிகர் யோகி பாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷன் என முன்னணி நட்சத்திரங்கள் இணைய உள்ளனர். 

 இதைத்தொடர்ந்து கனா திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அருண் ராஜா காமராஜர்  சமீபத்தில் லேபிள் எனும் வெப் தொடரை இயக்கியிருந்தார். இந்த தொடருக்கு கிடைத்த பிரம்மாண்ட  வெற்றியின் அடுத்தபடியாக பெண்களை மையமாக வைத்து உருவாகும்  ஒரு கதையில் நடிகை நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதை அடுத்து எதிர்நீச்சல் கொடி போன்ற திரைப்படங்களை இயக்கிய செந்தில்குமார் தற்பொழுது நடிகர் சூரியை வைத்து கருடன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். 

தலைவர் 171வது படத்தை இயக்க சக இயக்குனர்களின் உதவியை நாடும் லோகேஷ் கனகராஜ்!

விடுதலை படத்தின் வெற்றியை தொடர்ந்து முழு நீள ஆக்சன் படமாக உருவாகும் கருடன் படத்தில் காமெடி நடிகர் சூரி ஹீரோவாக கலக்கி வருகிறார். இந்தப் படத்தை முடித்த பிறகு இயக்குனர் துரை செந்தில்குமார் நடிகை நயன்தாராவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார். மேலும் இந்த திரைப்படத்தை நடிகை நயன்தாராவின் கணவரான விக்னேஷ் சிவன் தயாரிக்க உள்ளது  குறிப்பிடத்தக்கது.

 மேலும் ஹிந்தியில் ஜவான் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து நடிகை நயன்தாராவிற்கு  அதிகமான ஹிந்தி பட வாய்ப்புகள்  அடுத்தடுத்து வருவதாக கூறப்படுகிறது. 20 வருடங்களுக்கு மேலாக முன்னணி கதாநாயகியாகவும்,  லேடி  சூப்பர் ஸ்டார் ஆகவும்  வலம் வரும்  நடிகை நயன்தாராவின் திரைப்படத்தை  பார்க்க கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் காத்து வருகின்றனர்.

மேலும் உங்களுக்காக...