தலைவர் 171வது படத்தை இயக்க சக இயக்குனர்களின் உதவியை நாடும் லோகேஷ் கனகராஜ்!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து தற்பொழுது ஜெய் பீம் இயக்குனர் ஞானவேலு இயக்கத்தில் தனது 170வது திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் திருவனந்தபுரம், திருநெல்வேலியை தொடர்ந்து சமீபத்தில் மும்பையில் சில காட்சிகள் படமாக்கப்பட்டது. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.

தற்பொழுது தலைவர் 170வது திரைப்படம் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் ஜனவரி 24ஆம் தேதிக்குள் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் முடிவடைய வாய்ப்புள்ளதாக சமீபத்திய தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி கேமியோ ரோலில் நடித்த லால் சலாம் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171 வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

மாநகரம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தற்பொழுது பிரபல இயக்குனர்களின் ஒருவனாக வலம் வருகிறார். லோகேஷ் இயக்கத்தில் மாநகரம் திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் கைதி, தளபதி விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம், உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் விக்ரம் திரைப்படம் என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார். சமீபத்தில் தளபதி விஜய் உடன் இரண்டாவது முறையாக இணைந்து லியோ திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் உருவான இந்த லியோ திரைப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்யும் என சினிமா வட்டாரங்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து எல் சி யு கான்செப்ட், வன்முறையான சண்டைக் காட்சிகள், அத்துமீறும் சில வசனங்கள், சமூக நலனிற்கு தீங்கான கஞ்சா விற்பனை இதை மையமாக வைத்து படங்கள் நகர்வதால் அடுத்தடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளடைவில் குறைய தொடங்கியது. மேலும் லியோ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எதிர்பார்த்த அளவு மக்களை திருப்தி படுத்தவில்லை. அதில் உள்ள தவறுகளை இயக்குனர் லோகேஷ் ஒரு பேட்டியின்போது தானாக ஒத்துக் கொண்டுள்ளார்.

ரிலீசுக்கு முன்பே 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்த விடாமுயற்சி திரைப்படம்!

இந்த நிலையில் லியோ திரைப்படத்தை தொடர்ந்து தலைவர் 171 வது திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு லோகேஷ் அவர்களுக்கு கிடைத்துள்ளது. இந்த படத்தின் கதையை உருவாக்கும் பட்சத்தில் தொடர்ந்து ஆறு மாத காலம் சமூக வலைத்தளங்களில் இருந்து விடுப்பு எடுத்துக் கொள்ள உள்ளதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் லோகேஷ் தெரிவித்திருந்தார். லியோ திரைப்படத்தை போன்று இந்த திரைப்படத்தில் எந்த குறையும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் இயக்குனர் லோகேஷ் தற்பொழுது உறுதியாக உள்ளார்.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக உருவாக்க இருக்கும் தலைவர் 171 வது திரைப்படத்தின் கதை முழுவதுமாக தயாராகும் பட்சத்தில் அந்த கதை குறித்து தனது சக இயக்குனர்களான வெங்கட் பிரபு, கௌதம் மேனன் போன்ற பிரபல முன்னணி 8 இயக்குனர்களுடன் கலந்து ஆலோசிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கலந்த ஆலோசனை மூலம் படத்தில் ஏற்படும் சில குறைகளை தவிர்க்க வாய்ப்புள்ளதாக லோகேஷ் முடிவு செய்துள்ளார். இதைத்தொடர்ந்து தலைவர் 171 வது திரைப்படத்திற்கு வசனம் எழுதும் பணியில் லோகேஷ் கனகராஜ் மும்முரமாக ஈடுபட உள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews