1970களில் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி உச்சத்தில் இருந்த சமயத்தில் ஜெய்சங்கர் வளர்ந்து வரும் நடிகராக இருந்தார். 1971 ஆம் ஆண்டு எம்ஜிஆர், சிவாஜி ஜெய்சங்கர் நடித்த படங்கள் ஒரே நாளில் தீபாவளி தினத்தில் வெளியானது. ஆனால் அதே தினத்தில் வெளியான இன்னொரு திரைப்படமான ஆதிபராசக்தி என்ற திரைப்படம் தான் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
எம்ஜிஆர் நடித்த நீரும் நெருப்பும் என்ற திரைப்படம் 1971 தீபாவளி அன்று வெளியானது. அந்த படத்தில் எம்.ஜி.ஆர் இரண்டு வேடங்களில் கதாநாயகன் மற்றும் வில்லன் வேடங்களில் நடித்திருப்பார். ஜெயலலிதா, அசோகன், மனோக,ர் சிஎல் ஆனந்தன், தேங்காய் சீனிவாசன் உள்பட பலர் இந்த படத்தில் நடித்திருப்பார்கள். நீலகண்டன் இயக்கத்தில் எம்எஸ் விஸ்வநாதன் இசையில் உருவான இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இதே நாளில் தான் சிவாஜி கணேசன் நடித்த பாபு என்ற திரைப்படம் வெளியானது. ஏசி திரிலோகசந்தர் இயக்கத்தில் சிவாஜி கணேசன், பாலாஜி, மேஜர் சுந்தரராஜன், வி கே ராமசாமி, நாகேஷ், சிவக்குமார், எம்ஆர்ஆர் வாசு உள்பட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். எம்எஸ் விஸ்வநாதன் இசையில் இந்த படத்தில் இடம்பெற்ற இதோ எந்தன் தெய்வம் உள்பட பல பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியது. இந்த படம் சுமாரான வெற்றியை பெற்றது.
ஜெயலலிதாவை பார்த்து நடுங்கிய ஜெய்சங்கர்! தைரியமாக அழைத்து பேசிய ஜெயலலிதா.. நண்பர்களான அந்த தருணம்..
இதே நாளில் தான் ஜெய்சங்கர் நடித்த வீட்டுக்கு ஒரு பிள்ளை என்ற படம் வெளியானது. ஆனால் இதே தீபாவளி தினத்தில் வெளியான கேஎஸ் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான ஆதிபராசக்தி என்ற திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. நகரங்களில் மட்டுமின்றி கிராமங்களிலும் இந்த படம் மிகப்பெரிய அளவில் வசூலை வாரி குவித்தது.
சிவபெருமானாக ஜெமினி கணேசன், பார்வதி ஆக ஜெயலலிதா நடித்த இந்த திரைப்படத்தில் பத்மினி, முத்துராமன், எஸ்பி ரங்காராவ், வாணிஸ்ரீ, நம்பியார், ராஜேஸ்வரி, வெண்ணிற ஆடை நிர்மலா, ஸ்ரீதேவி உள்பட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக முருகன் கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் 11 பாடல்கள் இடம் பெற்று இருந்தது என்பதும் அனைத்து பாடல்களும் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வெளியாகி பல மடங்கு லாபத்தை கொடுத்தது. தமிழ் சினிமாவில் இன்றுவரை ஒரு மிகச்சிறந்த சாமி படம் என்றால் அது ஆதிபராசக்தி படம் தான் என்று சொல்வார்கள்.
கேஎஸ் கோபாலகிருஷ்ணன் பல வெற்றி படங்களை தயாரித்திருந்தாலும் அவருக்கு மிகப்பெரிய பெரும் புகழும் பெற்றுக் கொடுத்த இந்த படம் தான். இந்த படம் ஹிந்தியிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி அங்கும் வசூலை வாரி குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.