30 நாட்களில் 280 கோடி சம்பாதிக்க முடியுமா!.. கமலுக்கு காசுமேல காசு வந்து கொட்டுகிற நேரம் இது!..

Published:

உலகநாயகன் கமல்ஹாசன் வெறும் 30 நாட்களில் 280 கோடி ரூபாய் சம்பாதிக்கப் போகிறார் என்று சொன்னால் நம்ப முடிகிறாதா? ஆனால், அதுதான் நீங்க நம்பினாலும் நெசம் என கூறுகிறது சினிமா வட்டாரம்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் கடந்த ஆண்டு நடித்த விக்ரம் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வசூல் வெற்றியை பெற்றுத் தந்தது. அதன் காரணமாக சிம்புவை வைத்து ஒரு படம், சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் தயாரித்து வருகிறார்.

மேலும், ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டு இருப்பதாக கூறுகின்றனர்.

30 நாட்களில் 280 கோடி சம்பளம்:

ஆனால் தற்போது நாம் அதைப் பற்றி எல்லாம் பார்க்கப் போவதில்லை. வெறும் 30 நாளுக்கு கமலஹாசனுக்கு எப்படி 280 கோடி ரூபாய் சம்பளம் கிடைக்கப் போகிறது என்பதைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

இயக்குனர் நாக அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள கல்கி திரைப்படத்தில் வெறும் 20 நாளுக்கு நடிக்க நடிகர் கமல்ஹாசனுக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் அடுத்த மாதம், விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறார். அதற்காக மட்டும் கமல்ஹாசனுக்கு சுமார் 130 கோடி ரூபாய் சம்பளமாக வழங்க போவதாக தற்போது ஹாட் அப்டேட்கள் வெளியாகி உள்ளன.

எப்படி சாத்தியம்:

பிரபாஸ் படத்தில் நடிக்க 150 கோடி ரூபாயும் 10 அல்லது 13 வாரங்களை தொகுத்து வழங்க கமல்ஹாசனுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு 130 கோடி ரூபாயும் சம்பளமாக வழங்கப்படும் நிலையில் ஒட்டுமொத்தமாக கணக்கிட்டுப் பார்த்தால் 280 கோடி ரூபாய் வருமானம் வரப்போவதாக தெரிகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிறு என இருதினங்கள் கமல்ஹாசன் வருகிறாரே 20 நாட்களுக்கு மேல் கால் சீட் ஆகிறது என யோசிப்போருக்கு பிக் பாஸ் ஷூட்டிங் ஒரே நாளில் தான் நடக்கும் என்றும் அதைத்தான் சனி மற்றும் ஞாயிறு ஷோவாக விஜய் டிவி பிரித்து வழங்கி வருவது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டியது அவசியம்.

காசுமேல காசு வந்து:

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இப்படி ஒரு ஜாக்பாட் ஆன வருமானம் வருவதால் தான் ஆறு சீசன்களை தொடர்ந்து ஏழாவது சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்க முன் வருவதாகவும் கூறுகின்றனர்.

அரசியலில் கமல் ஈடுபட்டு வரும் நிலையில் அதிகமான தொகையை செலவு செய்ய வேண்டிய உள்ள நிலையில் அனைத்து வழிகளையும் பயன்படுத்தி எப்படி சம்பாதிக்கலாம் என்கிற திட்டத்தை தெளிவாக திட்டி 68 வயதிலும் ஓய்வு உறக்கமின்றி உழைத்து வருகிறார் உலகநாயகன்.

இதையெல்லாம் தாண்டி கமல் தயாரிப்பில் வெளியாகும் படங்கள் வசூல் வேட்டை அடைந்தால் அதன் ஒட்டுமொத்த லாபமும் கமலுக்குத் தான் வந்து சேரும் என்பதை அறிந்த திரையுலகம் மனுஷன் எப்படி சம்பாதிக்கிறார் பாருங்க என வாய் பிளந்து வியந்து பார்த்து வருகிறது.

மேலும் உங்களுக்காக...