‘கண்ணதாசன்’ – அடுத்த பல தலைமுறைகளுக்கு திரையுலகில் பாடலாசிரியராக அல்லது எழுத்தாளராக சாதிக்கத் துடிக்கும் பலருக்கும் நிச்சயம் சிறந்த இன்ஸபிரேஷனாக காலத்தால் அழிக்க முடியாத ஒரு கலைஞர் தான் அவர். கண்ணதாசன் பல பாடல்களையும், கதைகளையும் எழுதி இருந்தாலும் அவருக்கு பெரிய பாடகராக வேண்டும் என்ற கனவும் இருந்துள்ளது.
ஆனால், இதை அவரது நெருங்கிய நண்பரான இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் தடுத்தது தொடர்பாகவும் அதன் பின்னால் உள்ள காரணம் பற்றியும் தான் தற்போது பார்க்கப் போகிறோம்.
காலத்தால் அழியாத காவியங்கள்
உள்ளத்தில் நல்ல உள்ளம், போனால் போகட்டும் போடா, தெய்வம் தந்த வீடு, என்ன தான் நடக்கும், காலங்களில் அவள் வசந்தம் என கண்ணதாசன் எழுதிய பல பாடல்கள் எந்த காலத்திலும் ஏற்புடையதாக இருக்கும் மாயாஜால வரிகளால் உருவாக்கப்பட்டவை. இதே போல நிறைய திரைப்படங்களில் எழுத்தாளராகவும் பணிபுரிந்துள்ள கவியரசு கண்ணதாசன், சில திரைப்படங்களில் சின்ன கதாபாத்திரங்களிலும் மேடையில் பாடகர் போல வரும் காட்சிகளில் நடிக்கவும் செய்துள்ளார்.

இது போக ஆன்மீக புத்தகங்களையும் எழுதி தனது வாழ்நாள் முழுவதையும் இலக்கியத்துக்காகவே அர்பணித்து விட்டு போன கண்ணதாசனுக்கு பாடகராக வேண்டுமென்ற ஆசையும் இருந்துள்ளது. ஆனால், அவர் நிறைய பாடல்களை எழுதி கொடுத்த இசையமைப்பாளரும், நண்பருமான எம். எஸ். விஸ்வநாதன் இதற்கு நோ சொல்லிவிட்டாராம்.
வேண்டவே வேண்டாம்..
கவிஞராக தனது வரிகள் மற்றும் வார்த்தைகள் மூலம் சரித்திரம் படைத்த கவிஞர் கண்ணதாசனுக்கு பாடகராக வேண்டும் என்ற ஆசையும் இருந்துள்ளது. ஆனால், இந்த கனவிற்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக இருந்தவர் அவரது நெருங்கிய நண்பரும், மறைந்த இசையமைப்பாளரும் ஆன எம். எஸ். விஸ்வநாதன் தான். தனது நண்பன் கண்ணதாசன், கவிஞராக பெயர் எடுத்தது போல அவரால் பாடகரானால் நிச்சயம் பெயர் எடுக்க முடியாது என எம். எஸ். வி கருதி உள்ளார்.
இதன் காரணமாகவே, கண்ணதாசனை பாடகராக வேண்டாம் என எம்.எஸ்.வி கூறியதுடன் அவர் வரிகள் காலம் கடந்தும் நிற்கும் படி கண்ணதாசன் திறனை சரியாக பயன்படுத்தி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நான் கடந்த 7 ஆண்டுகளாக பல வலைத்தளங்களில் கிரிக்கெட், சினிமா தொடர்பான செய்திகளை சுவாரஸ்யம் குறையாமல் வாசகர்கள் விரும்பும் வகையில் எழுதி வருகிறேன். இணையத்தில் இன்று ஏராளமான செய்திகள் சரியான விவரங்கள் இல்லாமல் வெளியாகி வரும் சூழலில் முடிந்த அளவுக்கு சிறந்த செய்திகளை கொடுப்பதற்கு நான் முன்னுரிமை கொடுத்து எழுதி வருகிறேன்.

