திரை உலகைப் பொறுத்தவரை போட்டிகள் அதிகம் இருந்தாலும் நம்முடைய திறமையால் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்துடன் வருபவர்கள் மட்டுமே முன்னேறுவார்கள். இன்னொருவரின் புகழை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்துடன் திரையுலகில் வந்தவர்கள் இதுவரை ஒருவர் கூட வெற்றி பெறவில்லை.
அந்த வகையில் தமிழ் திரை உலகில் அசைக்க முடியாத புகழை பெற்றிருந்தவர் எம்ஜிஆர். அவரது போட்டியாளராக சிவாஜிகணேசன் இருந்தாலும் எம்ஜிஆரை வீழ்த்த வேண்டும் என்று அவர் ஒரு நாளும் நினைத்ததில்லை. தனது பாணியில் நடிப்பை வெளிப்படுத்தி எம்ஜிஆருக்கு போட்டியாளர் என்பதை அவ்வப்போது அவர் ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தாலும் இருவரும் நண்பர்களாக இருந்தனர்.
ஆனால் எம்ஜிஆருக்கு கிடைத்த மிகப்பெரிய புகழை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் கலைஞர் கருணாநிதி தனது மகன் மு.க.முத்துவை சினிமாவில் களம் இறக்கினார். எம்.ஜி.ஆர். பாணி தோற்றம் மற்றும் குரல் இருப்பதையடுத்து கண்டிப்பாக மு.க முத்து, எம்ஜிஆர் அளவுக்கு சினிமாவில் புகழ் பெறுவார் என்று தான் அவர் யூகித்தார்.
கடைசி நேரத்திலும் கமலின் மகளுக்காக எம்ஜிஆர் கொடுத்த அன்பு பரிசு என்ன தெரியுமா?
இதற்காக தனது தாயார் அஞ்சுகம் அம்மாள் பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் மு.க.முத்துவை ஹீரோவாக்கினார். பராசக்தி உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் இந்த படம் உருவானது.
மு.க.முத்து, விஜயகுமாரி, லட்சுமி, மனோகர் உள்ளிட்ட பலரது நட்பில் உருவான பிள்ளையோ பிள்ளை படம் கடந்த 1972 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியானது. எம்எஸ் விஸ்வநாதன் இசையில் இந்த படத்தில் ஐந்து பாடல்கள் இடம் பெற்றன. ஐந்து பாடல்களும் எம்ஜிஆர் பாணியில் படமாக்கப்பட்டது.
இந்த படம் ஓரளவுக்கு வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக பூக்காரி என்ற திரைப்படத்தில் மு.க.முத்து நடித்தார். இந்த படத்தையும் கிருஷ்ணன் பஞ்சு தான் இயக்கினார்கள். திரைக்கதை வசனத்தை கலைஞர் கருணாநிதி எழுதினார். ஆனால் இந்த படம் முதல் படமான பிள்ளையோ பிள்ளை அளவுக்கு வெற்றி பெறவில்லை என்றாலும் ஓரளவுக்கு சுமாராக ஓடியது.
ஆனால் இந்த பிறகு இரண்டு படங்களை அடுத்து மு.க.முத்து நடிப்பில் வெளியான எந்த படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. 1974 ஆம் ஆண்டு வெளியான சமையல்காரன் 1975 ஆம் ஆண்டு வெளியான நம்பிக்கை நட்சத்திரம், இங்கேயும் மனிதர்கள் உள்பட சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்த நிலையில் தான் கலைஞர் கருணாநிதிக்கும் மு.க.முத்துக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் எம்ஜிஆரிடம் சென்று உதவி கேட்டதாகவும் கூறப்பட்டது. எம்.ஜி.ஆர் அவரை சமாதானப்படுத்தி நான் கலைஞரிடம் பேசுகிறேன் என்று கூறி அனுப்பி வைத்தார். ஆனால் அதன் பிறகு அவர் கலைஞரிடம் எந்தவிதமான உதவியும் கேட்கவில்லை என்று கூறப்பட்டது.
எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு ஜெயலலிதாவை மு.க முத்து சந்தித்ததாகவும் ஜெயலலிதா அவரது வறுமை போக்க பண உதவி செய்துள்ளார். இது கலைஞரின் காதுக்கு தெரிந்த போது அவர் மிகவும் வருத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது. கலைஞர் குடும்பத்திலிருந்து பிரிந்து இருந்தாலும் மு.க முத்துவுக்கு, மு.க.அழகிரி மீது மட்டும் பாசம் இருந்ததாகவும் இருவரும் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் வறுமை காரணமாக அவர் போதை பழக்கத்திற்கு அடிமையாகி எப்போதும் போதையில் இருந்துள்ளார். தனது அரசியல் இமேஜிற்கு ஒரு கரும்புள்ளியாக தனது மகனே இருப்பதாக கலைஞர் மு.கருணாநிதி தனது நண்பர்கள் வட்டாரத்தில் மிகவும் வருத்தமுடன் அவரைப் பற்றிய கூறுவதாக கூறுவாராம்.
கலைஞர் கருணாநிதி மறைந்த போது கூட குடும்பத்தினருடன் சென்று இறுதி மரியாதை செய்யாமல் தனியாக சென்று சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் சமாதியில் இவர் மரியாதை செலுத்தியுள்ளார். மு.க.முத்து தனது தாய்மாமன் மகளை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அறிவுநிதி என்ற மகன் உண்டு. இவர் தற்போது டாக்டராக உள்ளார்.