நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தியின் 26வது படம் ‘வா வாத்தியாரே’!!

Published:

சூது கவ்வும், காதலும் கடந்து போகும் போன்ற மாறுபட்ட படங்களை கொடுத்தவர் நலன் குமாரசாமி. நாளைய இயக்குனர் மூலம் அறிமுகமான இயக்குனர்களுள் நலன் மிக முக்கியமானவர். சூப்பர் டீலக்ஸ், மாயவன் போன்ற படங்களின் எழுத்துப்பணியில் பங்காற்றி இருக்கிறார்.

அவர் திரைக்கதைக்கு என்று ரசிகர் பட்டாளம் உள்ளது. சூது கவ்வும் போன்ற பிளாக் காமெடி படத்தை மக்கள் ரசிக்கும் படி படைத்திருப்பார். காதலும் கடந்து போகும் படம் ‘My Dear Desperado’ எனும் கொரியன் படத்தினை தமிழில் ரீமேக்.

கொரியன் படங்கள் தமிழ் சினிமாவிற்கு ஒத்து போகும் என்பதால் ரீமேக் செய்திருப்பார்கள் போல,  இருந்தாலும் அந்த கொரியன் படத்தை தமிழ் பார்வையாளர்களுக்கு ஏற்ற வகையில், காட்சி படுத்தி இருப்பார்.

காதல், நட்பு அதை கடந்து போகவேண்டிய சூழல். அதுவே நிஜம் என்பதையும் அழகாக நியாப்படுத்திய படம். தமிழ் சினிமாவிற்கு மிகவும் புதிய பாணி அந்த படம். விஜய் சேதுபதி மற்றும் மடோனா செபாஸ்டியனின் நடிப்பில் படம் தத்ரூபமாக இருக்கும்.

அப்படிப்பட்ட இயக்குனருடன் கார்த்தி கைகோர்த்திருப்பது நல்ல நேரம் தான். சமீபத்தில் கார்த்தி நடித்து வெளியான ஜப்பான், ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் படத்துடன் மோதியது. கார்த்திக் சுப்புராஜின் ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்தான் வெற்றியை பெற்றது.

எஸ்.ஜே சூர்யா மற்றும் லாரன்ஸின் நடிப்பினை புகழ்ந்து வருகின்றனர். அதோடு, வசூலையும் குவித்து வருகிறது. ஜப்பானுக்கு பெருத்த அடியாக அமைந்தது. இதனால், அடுத்த படம் நிச்சயம் வெற்றி படமாக அமைய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் கார்த்தி.

அதற்கு நிச்சயம் ’வா வாத்தியாரே’ கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். கார்த்தியுடன், சத்யராஜ், ஆனந்த ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். படத்தின் பெயரினை படத்தின் தயாரிப்பாளர் வெளியிட்டு சூது கவ்வும் படம் போல இந்தப்படமும் சிறப்பாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

மேலும் உங்களுக்காக...