அரசியல்வாதிகளுக்கு படிப்பினைகள் இல்லை… மன்னிப்புக்கு நோ சான்ஸ்… கமல் உறுதி

தக் லைஃப் பட ஆடியோ லாஞ்சில் கமல் சிவராஜ்குமாரைப் பார்த்து ஒரு வார்த்தை சொன்னார். சிவராஜ்குமாருடைய குடும்பம் எனது குடும்பம். அதனால் தான் அவர் இங்கு வந்துள்ளார். தமிழில் இருந்து வந்ததுதான் கன்னடம் என…

தக் லைஃப் பட ஆடியோ லாஞ்சில் கமல் சிவராஜ்குமாரைப் பார்த்து ஒரு வார்த்தை சொன்னார். சிவராஜ்குமாருடைய குடும்பம் எனது குடும்பம். அதனால் தான் அவர் இங்கு வந்துள்ளார். தமிழில் இருந்து வந்ததுதான் கன்னடம் என சிவராஜ்குமாரைப் பார்த்து சொன்னார். இதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்புகள் வந்தன.

கமல் வரலாறு தெரியாமல் பேசுகிறார் என கர்நாடக முதல்வர் சித்தாராமையா கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் என்ன சொல்றாருன்னு பாருங்க.

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவுக்கு வருகை தந்திருந்த கன்னட நடிகர் சிவராஜ்குமாரிடம் உங்க பாஷை தமிழில் இருந்து வந்தது என்று கமல் கூறினார். அதற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. அங்கு தக் லைஃப் பேனர்கள், போஸ்டர்கள் கிழித்து எறியப்பட்டன. படம் வரும் ஜூன் 5ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் கமல் இப்படியா பேசுவாரு? வாயை வச்சிக்கிட்டு சும்மா இருந்தா தானேன்னு பலரும் விமர்சனம் செய்தனர்.

கர்நாடகா முதல்வர் சித்தராமையாவும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கன்னட மொழிக்கு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. அதெல்லாம் கமல்ஹாசனுக்குத் தெரியாது. வரலாறு தெரியாமல் பேசிக் கொண்டு இருக்கிறார் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

kamal, siddha ramaiya, sivarajkumar
kamal, siddha ramaiya, sivarajkumar

கமலிடம் இந்தப் பிரச்சனை பற்றிக் கேள்வி எழுப்பினால் மன்னிப்பு கோருவதற்கு இடமில்லை என்கிறார். நான் எனக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட வரலாற்றை தான் சொன்னேன். இந்த பிரச்சனையையும், தக் லைஃப் படத்தையும் மக்கள் பார்த்துக் கொள்வார்கள். அரசியல்வாதிகள் மொழியைப் பற்றிப் பேசத் தகுதியற்றவர்கள். ஏனெனில் அவர்களுக்கு இதுபற்றி போதிய படிப்பினைகள் இல்லை.

இது எனக்கும் கூட பொருந்தும். எனவே இந்தப் பிரச்சனையை பற்றிய ஆழமான கருத்துக்களை வரலாற்று ஆய்வாளர்கள், மொழியாளர்கள், தொல்லியல் நிபுணர்களிடம் விட்டு விடுவோம். இது எனது பதில் அல்ல. விளக்கம். அன்பு என்றும் மன்னிப்பு கேட்காது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.