தண்ணீர் பிரச்சனையை தைரியமாக சொன்ன ஒரே இயக்குனர்.. ‘தண்ணீர் தண்ணீர்’ உருவான கதை..!

Published:

கே.பாலச்சந்தரின் ஒவ்வொரு படத்திலும் ஒரு சமூக அக்கறை இருக்கும். சமூகத்தில் உள்ள அவலங்களை தோலுரித்துக் காட்டுவதில் வல்லவர். பல திரைப்படங்களில் அவர் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து பேசி உள்ளார். பாரதி கண்ட புதுமைப்பெண் கதாபாத்திரங்களை படைத்துள்ளார்.

அந்த வகையில் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான தண்ணீர் தண்ணீர் என்ற திரைப்படம் மிக தைரியமாக தமிழகத்தில் இருந்த தண்ணீர் பிரச்சனையை எடுத்து காட்டியது. இந்த படம் ஆட்சியாளர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியதாகவும் கூறப்பட்டது.

எம்ஜிஆரால் நஷ்டமடைந்தாரா நடிகர் அசோகன்? பல வருட வதந்திக்கு முற்றுப்புள்ளி..!

thanneer thanneer3

கே.பாலச்சந்தர் இயக்கத்தில் கோமல் சுவாமிநாதன் கதை, வசனத்தில் பல விருதுகளை பெற்ற திரைப்படம்தான் தண்ணீர் தண்ணீர். தண்ணீர் பிரச்சனையை இந்த அளவுக்கு இதுவரை எந்த படமும் சொல்லவில்லை.

அத்திப்பட்டி என்றாலே சிட்டிசன் படத்தில் மேப்பில் இருந்து காணாமல் போன  கிராமம் என்பதுதான் இன்றைய இளைஞர்களுக்கு தெரிய வரும். ஆனால் அந்த காலத்திலேயே அத்திப்பட்டி என்னும் கிராமத்தில் தண்ணீர் பிரச்சனையுடன் வாழ்ந்த கிராம மக்களை கண் முன் நிறுத்தி காட்சிக்கு காட்சி மிரள வைத்து இருப்பார் பாலச்சந்தர்.

தண்ணீரை சுரண்டும் பெரிய பணக்காரர்கள் ஒரு பக்கம், தண்ணீர் கேட்டு மனு கொடுக்கும் பரிதாப மக்கள் இன்னொரு பக்கம் இருப்பதையும், பொதுமக்களை அலட்சியம் செய்யும் அதிகாரிகள் தண்ணீரை சுரண்டுபவர்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்பதையும் இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் கே.பாலச்சந்தர் தோல் உரித்து காட்டியிருப்பார்.

thanneer thanneer2

விவசாயிகள் ஒரு காலத்தில் எப்படி இருந்தார்கள் என்பதை காண்பிக்க ‘மூணு மாசம் நிலத்தில் வேலை செய்துவிட்டு வெள்ளாமைக்கு பிறகு 9 மாசம் காலாட்டி சோறு தின்ற காலம் எல்லாம் போச்சு’ என்ற வசனத்தின் மூலம் அவர்களின் பரிதாப நிலையை சொல்லி இருப்பார்.

காசை திருடினால் திருட்டு என்கிறார்கள், ஆனால் தண்ணீரை திருடியவனுக்கு மரியாதை கொடுக்கிறார்கள் என்று அரசியல்வாதிகளுக்கு தைரியமாக அவர் சாட்டை அடி கொடுத்திருப்பார்.

இந்த படத்தில் செவ்வந்தி என்ற கேரக்டரில் சரிதா மிகவும் இயல்பாக நடித்திருப்பார். வேகாத வெயிலில் பல கிலோமீட்டர் தூரம் தண்ணீர் சுமந்து வரும் கேரக்டரில் நடித்திருப்பார்.

தடைகளை தகர்த்து சாதனை செய்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’: எம்ஜிஆரின் அரசியலுக்கு அடித்தளம்..!

இந்த படத்தில் மிகவும் முக்கியமான கேரக்டர் என்றால் அது வாத்தியார் கேரக்டர் என்று சொல்லலாம். அவர் பேசும் ஒவ்வொரு வசனத்திலும் நக்கலும் நையாண்டியும் இருக்கும். குறிப்பாக உயரம் குறைந்த ஒரு நபருடன் பேசிக் கொண்டிருக்கும்போது அந்த நபர் ‘நான் ஆகஸ்ட் 15 அன்று பிறந்தேன்’ என்று கூறுவார். அப்போது ‘சுதந்திர தினத்தில் பிறந்தாயா? அதனால் தான் நீ இன்னும் வளராமல் இருக்கே’ என்று நக்கலுடன் பேசுவார். இதுதான் இடைவேளை காட்சி.

 

thanneer thanneer

அதேபோல் தண்ணீர் வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மந்திரியிடம் மனு கொடுக்க செல்லும்போது அந்த மந்திரி அவருடைய பிஏவிடம் கொடுப்பார். பிஏ கலெக்டரிடம் கொடுப்பார், கலெக்டர் ஆர்டிஓவிடம் கொடுப்பார், ஆர்டிஓ தாசில்தாரிடம் கொடுப்பார், தாசில்தார் டபேதாரிடம் கொடுத்தார், டபேதார் அதை கண்டுகொள்ளாமல் இருப்பார் என்ற காட்சி வைக்கப்பட்டிருக்கும். அரசு அலுவலகம் எந்த அளவுக்கு செயல்படுகிறது என்பதை இந்த ஒரு காட்சியின் மூலம் விளக்கப்பட்டிருக்கும்.

இந்த படத்தில் ராதாரவி ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருப்பார். அவருடைய கேரக்டர் படத்தின் மையப்புள்ளிக்கு உதவும் வகையில் இருக்கும்.

இந்த திரைப்படம் வெளியாகும் வரை தேர்தலை புறக்கணிப்பது என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியாத ஒன்றாக இருந்தது. ஆனால் தண்ணீர் பிரச்சனையை தீர்க்காவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம் என்று இந்த படத்தில் ஒரு காட்சியை வைத்திருப்பார் கே.பாலசந்தர். அந்த ஊரில் உள்ள ஒரு மக்கள் கூட ஓட்டுபோட வராமல் இருக்கும் காட்சி ஆச்சரியமாக இருக்கும். ஆனால் அதே நேரத்தில் ஒருவர் மட்டும் ஓட்டுபோட உள்ளே வரும்போது அவரை அதிகாரிகள் வரவேற்பார்கள். அப்போது ஒரு ஓரத்தில் வைக்கப்பட்டிருக்கும் மண்பானையை பார்த்து நான் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துக்கொள்ளலாமா என்று அதிகாரிகளிடம் கேட்பார். உடனே குடித்துக் கொள்ளுங்கள் என்று சொல்வார். அவர் தண்ணீரை குடித்து விட்டு ஓட்டு போடாமல் திரும்பி வந்து விடுவார். இந்த காட்சிக்கு தியேட்டரே தெறித்து கைதட்டும்.

இறுதியில் நாமே ஒரு கால்வாய் வைத்து தண்ணீர் பிரச்சனையை தீர்த்துக் கொள்வோம் என்று ஊரின் பொதுமக்கள் முடிவு செய்யும்போது அதையும் அரசாங்கம் தடுக்கும். அதுவும் வெட்ட வெளிச்சமாக காட்டப்பட்டு இருக்கும்.

புது வசந்தம் படத்திற்கு முன்னரே வந்த ஒரு காவிய திரைப்படம்.. மரபை கலைத்த ‘பாலைவன சோலை’

1981ஆம் ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி வெளியான இந்த படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதேபோல் படம் சூப்பர் ஹிட்டாகியது. இந்த படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது கிடைத்தது.

மேலும் உங்களுக்காக...