மகரம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2023!

Published:

மகர ராசி அன்பர்களே! ஆகஸ்ட் மாதத்தினைப் பொறுத்தவரை பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் இல்லாமல் பயணிக்க வேண்டிய மாதமாக இருக்கும். சமாளித்துப் போக வேண்டிய காலகட்டமாக இருக்கும். பொருளாதாரரீதியாக ஏற்றம் இறக்கங்கள் நிறைந்த மாதமாக இருக்கும்.

தொழில்ரீதியாக வேலைப்பளு அதிகமாக இருக்கும். சக பணியாளர்களுடன் பிரச்சினைகள் ஏற்படும். குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி பிரிந்து வாழும் சூழல் ஏற்படும். சேர்ந்து வாழும் தம்பதிகள் மத்தியிலும் தேவையில்லாத வாக்குவாதங்களால் பெரும் பிரச்சினைகள் ஏற்படும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

சோதனைகள் நிறைந்த காலகட்டத்தில் பக்குவமாகச் செயல்படுதல் நல்லது. மாணவர்களைப் பொறுத்தவரை முன் அனுபவம் வாய்ந்தவர்களிடம் ஆலோசித்து முடிவு எடுங்கள்.

தொழில்ரீதியாக பெரிய அளவில் முதலீடுகள் எதையும் செய்யாமல் அப்படியே நகர்த்திச் செல்வது தேவையற்ற நஷ்டத்தில் இருந்து மீள உதவும். குழந்தைகள் சொல்படி கேட்டு நடக்கமாட்டார்கள். குழந்தைகளிடம் பக்குவமாகச் செயல்படுங்கள்.

இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை எப்போது இந்த மோசமான காலகட்டத்திற்கு முடிவு வரும் என்று எதிர்பார்த்துக் காத்து இருப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தினைப் பொறுத்தவரை தாயின் உடல் நலன் ரீதியாக மருத்துவச் செலவுகள் ஏற்படும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

வண்டி, வாகனப் பயணங்கள் செய்யும்போது கவனத்துடன் செல்வது நல்லது. வெளியூர்ப் பயணங்களால் உடல் அலைச்சல் ஏற்படும். சிந்திக்காமல் முடிவு எடுத்து எந்தவொரு பிரச்சினையிலும் சிக்கிக் கொள்ளாதீர்கள்.

மேலும் உங்களுக்காக...