கம்பன் ஏமாந்தான்.. பாலசந்தரின் வித்தியாசமான படைப்பு நிழல் நிஜமாகிறது..!

By Bala Siva

Published:

கே.பாலச்சந்தரின் ஒவ்வொரு படமும் வித்தியாசமான கதையம்சம் கொண்டதாக இருக்கும். காதல், குடும்ப செண்டிமெண்ட், அர்த்தமுள்ள வசனங்கள், பாடல்கள், டைரக்சன் டச் என அவருடைய படங்கள் எல்லாமே மற்ற இயக்குனர்களின் படங்களிலிருந்து மிகப்பெரிய அளவில் வித்தியாசமாக இருக்கும்.

அந்த வகையில் பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான ஒரு வித்தியாசமான படம்தான் ‘நிழல் நிஜமாகிறது’. இந்த படத்தில் சரத்பாபு மற்றும் சுமித்ரா ஆகிய இருவரும் அண்ணன், தங்கையாக இருப்பார்கள். அவரது வீட்டிற்கு ஷோபா வேலைக்கு வருவார். வேலைக்காரி ஷோபா மீது சரத்பாபுக்கு ஒரு வகையான ஈர்ப்பு இருக்கும். அதே வீட்டில் வேலை செய்யும் காது கேளாத ஒருவருக்கும் ஷோபா மீது காதல் இருக்கும்.

தியாகராஜனை ஹீரோவாக்கிய படம்.. கமல், ரஜினி உச்சத்தில் இருந்தபோதே வெற்றி பெற்ற படம்..!

இந்த நிலையில் சரத்பாபுவின் நண்பர் கமல்ஹாசன் அவருடைய வீட்டுக்கு வருவார், தனது நண்பனை தனது வீட்டுக்கு அருகிலேயே ஒரு வீடு பார்த்து தங்க வைப்பார்.

nizhal nijamagiradhu2

இந்த நிலையில்தான் சரத்பாபுவின் ஆசை வார்த்தைகளை நம்பி ஷோபா தன்னை இழந்து விடுவார், கர்ப்பமாகியும் விடுவார். ஆனால் ஷோபாவின் கர்ப்பத்திற்கு கமல் தான் காரணம் என சுமித்ரா தவறாக நினைத்துக் கொள்வார். சுமித்ரா, கமல் ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் காதலிப்பார்கள். அந்த காதலை வெளியே சொல்ல முடியாமல் ஈகோ தடுக்கும்.

ஷோபா கர்ப்பத்துக்கு கமல்தான் காரணம் என்று தவறாக நினைத்துக் கொள்ளும் சுமித்ரா, ஷோபாவை வீட்டை விட்டு விரட்டி விடுவார். இதனையடுத்து கமல், ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் ஷோபாவை தங்க வைப்பார். துணைக்கு அதே வீட்டில் வேலை பார்த்த காது கேளாதவரையும் தங்க வைத்திருப்பார்.

வசனமும் இல்லை, பாடலும் இல்லை.. கமல்ஹாசனின் ஒரு வித்தியாசமான முயற்சி..!

ஒரு கட்டத்தில் ஷோபா கர்ப்பத்திற்கு தனது அண்ணன் சரத்பாபுதான் காரணம் என்பதை புரிந்து கொண்ட சுமித்ரா அவரை தனது வீட்டுக்கு அழைத்து வருவார். தனது அண்ணனுக்கு ஷோபாவை திருமணம் செய்து வைக்கவும் அவர் முயற்சிப்பார். அப்போது ஷோபா எடுக்கும் ஒரு வித்தியாசமான முடிவு, அந்த முடிவுக்கு கமல்ஹாசனும் ஆதரவு தெரிவிப்பது தான் இந்த படத்தின் கிளைமாக்ஸ். அந்த முடிவு என்ன என்பது படம் பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சியாக இருக்கும்.

nizhal nijamagiradhu1 1

இந்த படம் கடந்த 1978ஆம் ஆண்டு வெளிவந்து நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்தில் இரண்டே இரண்டு பாடல்கள் தான். இரண்டும் இன்று வரை பிரபலமாக உள்ளது. அதில் ஒன்றுதான் ‘கம்பன் ஏமாந்தான்’ என்ற பாடலாகும். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய இந்த பாடல் இன்று எங்கே கேட்டாலும் ரசிகர்கள் சொக்கி போய்விடுவார்கள். அதேபோல் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம் பாடிய ‘இலக்கணம் மாறுதோ’ என்ற பாடலும் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது.

கமல்ஹாசன் – சிங்கீதம் சீனிவாசராவ் கூட்டணியில் உருவான 6 படங்கள்.. எத்தனை சூப்பர்ஹிட்?

இந்த படம் மலையாளத்தில் வெளிவந்த ஒரு படத்தின் ரீமேக்காகும். ‘அடிமைகள்’ என்று மலையாளத்தில் வெளியான இந்த படத்தை தான் பாலச்சந்தர் தமிழுக்கு ஏற்றவாறு சில மாற்றம் செய்து, தன்னுடைய டச் சேர்த்து இந்த படத்தை உருவாக்கி இருப்பார். ‘நிழல் நிஜமாகிறது’ படம் கிளைமாக்ஸ்க்காகவே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.