தியாகராஜனை ஹீரோவாக்கிய படம்.. கமல், ரஜினி உச்சத்தில் இருந்தபோதே வெற்றி பெற்ற படம்..!

தற்போதைய சினிமா ரசிகர்களுக்கு தியாகராஜன் என்றால் அனேகமாக யார் என்று தெரிந்திருக்காது. ஆனால் அதே நேரத்தில் பிரசாந்த் அப்பா என்றால் தெரிந்திருக்கும். அந்த வகையில் தியாகராஜன் ஆரம்பத்தில் சிறு சிறு கேரக்டரில் நடித்து வந்தாலும் ஒரு கட்டத்தில் அவர் ஹீரோவாக நடித்தார். அவர் ஹீரோவாக நடித்த பல திரைப்படங்கள் நல்ல வரவேற்பு பெற்றது.

நடிகர் தியாகராஜன் முதல் முதலில் ஹீரோவாக நடித்த திரைப்படம் ‘மலையூர் மம்பட்டியான்’. இந்த படம் அவரை கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் உச்சத்தில் இருக்கும் போதே மிகப்பெரிய ஹீரோவாக்கியது. பின்னாளில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் நடித்த பல திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ராஜசேகர் இயக்கிய முதல் திரைப்படம் தான் மலையூர் மம்பட்டியான்.

ஐஸ்வர்யா ராய் ஜோடி இல்லை என்பதால் படத்தில் இருந்து விலகிய பிரசாந்த்.. அஜித்துக்கு அடித்த அதிர்ஷ்டம்..!

உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு மலையூர் மம்பட்டியான் கேரக்டர் உருவாக்கப்பட்டது. இந்த படத்தில் தியாகராஜன் நடித்தால் தான் சரியாக இருக்கும் என்று ராஜசேகர் சரியாக கணித்து அவரை நடிக்க வைத்திருந்தார். தியாகராஜனுக்கு இயல்பான நடிப்பு வரவில்லை என்றாலும் இந்த படத்தின் திரைக்கதை மற்றும் அசத்தலான காட்சிகள் இந்த படத்தை வெற்றிப்படமாக்கியது.

malaiyur

இந்த படத்தின் நாயகியாக சரிதா நடித்திருந்தார். வழக்கம் போல் அவர் தனது மிகச் சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தார். சில்க் ஸ்மிதா மற்றும் ஜெயமாலினி இந்த படத்தில் நடித்திருந்தாலும் வெறும் பாடலுக்கு மட்டும் நடனம் ஆடாமல் கேரக்டர் ரோலிலும் நடித்திருந்தனர். நகைச்சுவை நடிகரான கவுண்டமணி இந்த படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அவரது வில்லத்தனத்தை ரசிகர்கள் ஏற்றுக் கொண்ட படம் இதுதான்.

இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான ‘காட்டு வழி போற பொண்ணே’, ‘சின்ன பொண்ணு சேலை’ ஆகிய பாடல்கள் நல்ல வரவேற்பு பெற்றது. ராபின்ஹூட் வகையான பழிவாங்கும் கதை அம்சம் கொண்ட இந்த படத்தில் காதல், காமெடி, நடனம் என அத்தனை அம்சங்களும் இருந்ததை அடுத்து ராஜசேகர் ஒரு வெற்றிகரமான இயக்குனர் என அன்றைய நாளில் புகழ்பெற்றார்.

ஒரே தீபாவளியில் ரிலீஸ் ஆன சிவாஜி, கமல், ரஜினி படங்கள்.. ஆனால் ஜெயித்தது பாக்யராஜ் தான்..!

இந்த படத்திற்கு பிறகு வரிசையாக தியாகராஜனுக்கு ஹீரோவாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. குறிப்பாக ‘நல்ல நாள்’, ‘நீங்கள் கேட்டவை’, ‘கொம்பேறி மூக்கன’, ‘எரிமலை’, ‘காவல்’, ‘கருப்பு சட்டைக்காரன்’ உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்தார். ‘நல்ல நாள்’ என்ற திரைப்படத்தில் விஜயகாந்த் மற்றும் தியாகராஜன் ஆகிய இருவரும் நாயகர்களாக நடித்திருப்பார்கள். இந்த படமும் நல்ல வரவேற்பு பெற்றது.

அதன் பிறகு ஒரு கட்டத்தில் ஹீரோவாக நடிப்பதை நிறுத்திக் கொண்ட தியாகராஜன் குணசேத்திர, வில்லன் வேடங்களில் நடித்தார். கடந்த 2018ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘செக்கச் சிவந்த வானம்’ திரைப்படத்தில் அவர் ஒரு அசத்தலான கேரக்டரில் நடித்திருக்கிறார். அதேபோல் ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.

malaiyur1

ஒரே நாளில் வெளியான 3 மோகன் படங்கள்.. மூன்றும் வெற்றி.. ரஜினி, கமல் கூட செய்யாத சாதனை..!

தியாகராஜன் நடிப்பு மட்டுமின்றி சில படங்களை இயக்கியும் உள்ளார். கொம்பேறி மூக்கன் படத்தை தான் முதன்முதலாக அவர் இயக்கினார். அந்த படத்தின் வெற்றியை அடுத்து ‘பூவுக்குள் பூகம்பம்’, ‘சேலம் விஷ்ணு’ ஆகிய படங்களை இயக்கினார். அதன் பிறகு மகன் பிரசாந்த் நடித்த ‘ஆணழகன்’ என்ற திரைப்படத்தை இயக்கினார். தற்போது பிரசாந்த் நடித்து வரும் ‘அந்தகன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...