தமன்னாவின் புதிய வெப் சீரிஸ்.. பலான காட்சிகளால் ஜெயிலர் படத்திற்கு ஏற்பட்ட சிக்கல்?

Published:

நடிகை தமன்னா நடித்துள்ள புதிய வெப் சீரிஸ் மூலம் ஜெயிலர் படக்குழுவினர் வருத்தத்தில் உள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் நெல்சன் ஜெயிலர் படத்தினை இயக்கி வருகிறார். சன்பிக்சர்ஸ் நிறுவனம் ஜெயிலர் படத்தினை தயாரிக்கிறது.

இப்படத்தின் டைட்டில் லுக் & ஃபர்ஸ்ட் லுக், ரிலீஸ் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. ஜெயிலர் படத்தின் குறு முன்னோட்டம் சமீபத்தில் வெளியானது. முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் இந்த படத்தில் நடித்து வருகிறார்.
WhatsApp Image 2023 06 15 at 10.14.07 PM 1

இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரபல சண்டைப் பயிற்சி இயக்குனர் ஸ்டன் சிவா ஜெயிலர் படத்தில் சண்டைக்காட்சி இயக்குனராக பணிபுரிகிறார். பல்லவி சிங் ஜெயிலர் படத்தில் ஸ்டைலிஸ்ட் & ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிகின்றார். இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் மோகன்லால், சிவராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன், தமன்னா ஆகியோர் நடிக்கின்றனர்.

WhatsApp Image 2023 06 15 at 10.14.08 PM 1

இந்நிலையில் நடிகை தமன்னா நடித்துள்ள ஜீகர்டா என்ற இந்தி வெப் சீரிஸ் அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த வெப் தொடரில் தமன்னா வரம்பு மீறி பல காட்சியகங்களில் நடித்துள்ளார். இதனால் சமூக வலைத்தளங்களில் பல விமர்சகர்களுக்கும் தமன்னா ஆளாகி உள்ளார். ரசிகர்கள் இந்த வெப் சீரிஸ்க்கு எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர். இதனால் ஜெயிலர் படக்குழுவினர், வருத்தத்தில் உள்ளனர். தமன்னாவின் இமேஜ் சரிந்துள்ள நிலையில் இதனால் ஜெயிலர் படத்தினை ரசிகர்கள் எப்படி வரவேற்பார்கள் என்ற குழப்பத்தில் ஜெயிலர் குழுவினர் உள்ளனர். இதனால் தமன்னாவின் காட்சிகள் ஜெயிலர் படத்தில் குறைக்க படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

WhatsApp Image 2023 06 15 at 10.14.09 PM 1 1

இந்த ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் மாதம் சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஜெயிலர் படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

ஜெயிலர் படத்தை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்திலும் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் புதிய படத்திலும் நடிக்க உள்ளார். லைக்கா நிறுவனம் இந்த புதிய படத்தினை தயாரிக்கிறது. இப்படத்துக்கும் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

மேலும் உங்களுக்காக...