தமிழகம் மற்றும் கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களையும் சேர்த்து 100 கோடி ரூபாய்க்கு ஒரு பிரபல விநியோகிஸ்தர் கேட்டதாகவும், , ஆனால் தயாரிப்பு தரப்பு அதற்கு தேவையான ஒப்புக்கொள்ளவில்லை என்றும், தமிழகத்திற்கு மட்டுமே 100 கோடி ரூபாய் தர வேண்டும் என்று நிபந்தனை வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ‘ஜனநாயகன்’ படத்தை வாங்க ஏஜிஎஸ் உள்பட வேறு சில நிறுவனங்களும் முன்வந்துள்ளதாகவும், இதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த பேச்சுவார்த்தைகளில் கலைப்புலி எஸ். தாணு உள்பட பலரும் இருந்தாலும், இன்னும் வியாபாரம் இறுதி செய்யப்படவில்லை என்றும், தமிழக ரிலீஸ் உரிமையை வாங்குவது யார் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருப்பதாகவும் கூறப்படுகிறது.
‘ஜனநாயகன்’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வர உள்ளது. தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்னால் வருவதால், இந்த படம் அரசியல் அழுத்தங்களுக்கு உள்ளாகலாம் என்றும் கூறப்படுகிறது.
எனவே தான், இந்த படத்தை பெரிய தொகை கொடுத்து வாங்குவதற்கு விநியோகஸ்தர்கள் பின்வாங்குவதாகவும், “ஆளுங்கட்சிகளை எதிர்த்து சில கருத்துக்கள் இந்த படத்தில் இருக்கலாம்” என்று எதிர்பார்க்கப்படுவதால், அரசியல் அழுத்தம் இருப்பதால் இந்த படத்தை அவசியம் வாஞ்க வேண்டுமா? என்று சிலர் யோசிப்பதாகவும் கூறப்படுகிறது.
இப்படி ஒரு நிலையில், தமிழக ரிலீஸ் உரிமையை யார் வாங்குவார்கள்? அப்படியே வாங்கினாலும், அதை பிரச்சனை இல்லாமல் ரிலீஸ் செய்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.