ரூ.1000 கோடிக்கும் மேல் செலவு செய்து எடுத்த அவதார் ரூ.1 கோடியில் எடுத்த நம்மூர் படத்தின் காப்பியா..?

By Bala Siva

Published:

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் ரூ.1000 கோடிக்கு மேல் செலவு செய்து பிரம்மாண்டமாக எடுத்த அவதார் திரைப்படம் நம்மூரில் ரூபாய் ஒரு கோடி செலவில் எடுக்கப்பட்ட படத்தின் காப்பி என்றால் நம்ப முடிகிறதா? வாங்க விரிவாக பார்க்கலாம்.

கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அவதார். இந்த படம் ரூ.1000 கோடிக்கு மேல் செலவு செய்து எடுக்கப்பட்ட பிரம்மாண்டமான திரைப்படம் என்பது தெரிந்ததே. மேலும் இந்த படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூல் சாதனை செய்தது.

பிரபுவின் முதல் படமும் தோல்வி… 100வது படமும் தோல்வி… சிவாஜி கணேசன் தான் காரணமா?

ஆனால் அவதார் படத்தின் கதை பிரபு நடித்த வியட்நாம் காலனி படத்தின் கதை போலவே இருக்கும் என்றால் பலராலும் நம்ப முடியாது. மேலும் தமிழில் பிரபு நடித்த வியட்நாம் காலனி படமே மலையாளத்தில் மோகன்லால் நடித்த வியட்நாம் காலனி படத்தின் ரீமேக்தான்.

வியட்நாம் காலனி படத்தில், பிரபு படித்து பட்டம் பெற்ற பிறகு வேலையில்லாமல் இருப்பார். அப்பா வாங்கி வைத்த கடன் உள்பட பல்வேறு சிக்கல் இருப்பதால் அவர் ஒரு நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பார்.

vietnam colony1

அப்போதுதான் அவருக்கு ஒரு பெரிய கம்பெனியில் வேலை கிடைக்கும். ஆனால் அந்த வேலை, அவர் வேலை செய்யும் கம்பெனிக்கு சொந்தமான இடத்தில் இருக்கும் மக்களை காலி செய்யும் வேலை என்பது அவருக்கு பின்னர் தான் தெரியும். ஆனாலும் வேறு வழியின்றி அந்த வேலையை தொடர்வார்.

எழுத்தாளர் என்ற போர்வையில் அந்த காலனிக்கு சென்று அந்த பகுதி மக்களின் நன்மதிப்பை சம்பாதிப்பார். ஒரு கட்டத்தில் பிரபுவின் பேச்சைக் கேட்டு அந்த பகுதி மக்களும் காலி செய்ய ஒப்புக் கொள்வார்கள். ஆனால் அதன்பிறகு தான் வேலை செய்யும் நிறுவனம் மிகவும் மோசமானது என்றும், மக்களை நடுத்தெருவில் நிறுத்த போகிறார்கள் என்ற உண்மையும் பிரபுவுக்கு தெரியவரும்.

ஒரு பைசா கூட சம்பளம் வாங்காமல் ரஜினி நடித்த படம்.. 30 வருடங்களுக்கு முன்பே கோடிகளில் லாபம்..!

அதன் பிறகு அவர் அந்த கம்பெனி வேலையில் இருந்து விலகி, அந்த பகுதி மக்களோடு இணைந்து அவர்களுடைய இடத்தை காப்பாற்றி, மீண்டும் மக்களிடமே கொடுப்பார். இதுதான் பிரபு, வினிதா, கவுண்டமணி நடித்த வியட்நாம் காலனி படத்தின் கதை.

vietnam colony

வியட்நாம் காலனி படத்தின் கதையும் அவதார் படத்தின் கதையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியே இருக்கும்.

பிரபு கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு வேலைக்காக போகிறார் என்றால், அவதார் படத்தில் ஹீரோ பூமியிலிருந்து பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் ஒரு கிரகத்திற்கு செல்வார். பிரபு கடன் தொல்லை தாங்காமல் வேலைக்கு போகிறார் என்றால், அவதாரர் ஹீரோ அண்ணன் இறந்துவிட்டதால் தவிர்க்க முடியாத காரணத்தினால் வேலைக்கு செல்வார்.

பிரபு, வியட்நாம் காலனிக்கு முதன்முதலில் செல்லும்போது அங்கு ஒரு மிகப்பெரிய ரவுடி நிற்பார். பிரபுவுடன் வந்த ஆட்டோக்காரர் அந்த ரவுடியை பார்த்ததும் பயந்து ஓடுவார். அதேபோல் அவதார் திரைப்படத்தில் வேற்று கிரகத்திற்கு செல்லும் ஹீரோவின் பின்னால் ஒரு மிகப்பெரிய மிருகம் இருக்கும். அதை பார்த்து அவருடன் வந்தவர் பயந்து நடுங்குவார்.

பிரபுவுக்கு வியட்நாம் காலனியில் வீடு கொடுக்கக் கூடாது என்று ஒரு சிலர் சண்டை போடுவார்கள். அதேபோல்தான் அவதார் படத்திலும் ஹீரோவை நம்ம குரூப்பிலும் சேர்க்க கூடாது என்று சிலர் சண்டை போடுவார்கள்.

avatar 1

பிரபு சம்பந்தப்பட்ட நிறுவனத்தில்தான் வேலை பார்க்கிறார் என்று மக்களுக்கு தெரிந்ததும், அந்த பகுதி மக்கள் பிரபுவை அடித்து விரட்டுவார்கள். அதே போல்தான் அவதார் படத்திலும் நம்மை காலி செய்யத்தான் இந்த ஹீரோ வந்திருக்கிறார் என்று சொல்லி ஹீரோவை அடித்து விரட்டுவார்கள்.

பிரபு ஒரு கட்டத்தில் வியட்நாம் காலனி மக்களுடன் இணைந்து தான் வேலை பார்த்த நிறுவனத்திற்கு எதிராகவே போராடுவார். அதேபோல் தான் அவதார் ஹீரோ அந்த கிரகத்தின் மக்களுடன் சேர்ந்து கொண்டு தன்னை அனுப்பிய நிறுவனத்திற்கு எதிராகவே போராடுவார்.

25 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்த ரஜினி.. 2 நாட்களை திருப்பி கொடுத்த இயக்குனர்.. 175 நாள் ஓடிய குருசிஷ்யன்..!

மொத்தத்தில் அவதார் படம் மலையாளத்தில் மோகன்லால் நடித்த வியட்நாம் காலனி, தமிழில் பிரபு நடித்த வியட்நாம் காலனி படத்தின் கதை என்றுதான் கூற வேண்டும். ஆனால் படத்தில் மிகச்சிறப்பாக கிராபிக்ஸ் காட்சிகள், கற்பனை காட்சிகள், கற்பனை கிரகத்தை உருவாக்கியதால் ஆயிரக்கணக்கான கோடியை ஜேம்ஸ் கேமரூன் சம்பாதித்தார். ஆனால் அந்த படத்தின் அடிப்படை கதை கிட்டத்தட்ட வியட்நாம் காலனி படத்தின் கதை போன்றதுதான்.