Jallikattu: பொங்கல் என்றாலே அனைவருடனும் கொண்டாடும் பண்டிகை. குடும்பத்தினருடன் மகிழ்ச்சியோடு கரும்பு கடித்து மகிழும் பண்டிகை. பொங்கல் பண்டிகை முடிந்த அடுத்த நாள் வீட்டில் தெய்வமாக வணங்கும் பசுவையும் உழவர்களின் தோழனான காளையையும் அலங்கரித்து வழிபடும் உற்சாக திருவிழா நடக்கும். அதுதான் மாட்டுப் பொங்கல்.
நடிகர் ஷாருக்கான் பார்த்து தல அஜித் கற்றுக்கொண்ட அந்த ஒரு விஷயம்!
அத்தோடு கிராமப்புறங்களில் கலக்கலாக ரேக்ளா ரேஸ் மற்றும் ஜல்லிக்கட்டு முக்கிய இடம்பெறும். தமிழர்களின் பாரம்பரியத்தோடு ஒன்றி விட்ட இந்த ஜல்லிக்கட்டு என்ற ஏறு தழுவுதல் ப்ளாக் அண்ட் ஒயிட் கால படங்களில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும் ரஜினிகாந்த் நடித்து 1980ல் வெளிவந்த முரட்டுக்காளை படத்திற்கு பிறகு தான் சரளமாக தமிழ் படங்களில் வீர விளையாட்டாக காட்சிப்படுத்தப்பட்டது.
இயக்குனர் எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் வந்த இந்த படம் அலங்காநல்லூர், மற்றும் ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற மற்றொரு ஊரான சிவகங்கை சிராவயல், பாகனேரி பகுதிகளில் எடுக்கப்பட்டது.
ஜல்லிக்கட்டை சிறப்பாக காண்பித்த வகையிலும் அதன் பிறகு இளையராஜாவின் இசையில் வரும் பொதுவாக எம்மனசு தங்கம் பாடலும் மிக அரியதொரு வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது. 42 லட்சத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் 4.1 கோடி ரூபாய் வரை வசூல் செய்து வெற்றி படமாக திகழ்ந்தது.
விருமாண்டிக்கு பிறகு கமல் படத்தில் மீண்டும் ‘அபிராமி’
அதேபோன்று கமல் நடிப்பில் வெளியான விருமாண்டி படத்திலும் ஜல்லிக்கட்டு மிக விரிவாக காண்பிக்கப்பட்டது. கமல் எழுதி இயக்கிய இந்த விருமாண்டி படம் 2004 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்தது.
ஜல்லிக்கட்டை மிக விரிவாக இப்படத்தில் காட்சிப்படுத்தி இருப்பார். வாடிவாசலில் இருந்து காளைகள் ஓடி வருவதில் ஆரம்பித்து அழகிய முறையில் காட்சிப்படுத்தி இருப்பார் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் கேசவ் பிரகாஷ்.
10 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த விருமாண்டி படம் 40 கோடி வரை வசூல் செய்து வெற்றி பெற்றது. அதேபோன்று இந்த படம் தென்கொரியாவில் நடைபெற்ற உலக திரைப்பட விழாவில் 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆசிய திரைப்படம் விருதையும் பெற்றது.
ஆனால் இப்போதெல்லாம் ஜல்லிக்கட்டு என்றாலே எந்த படம் நினைவுக்கு வருகிறதோ இல்லையோ சென்னை மெரினாவில் திரண்ட கூட்டம் தான் பலருக்கும் நினைவுக்கு வரும்.