நடிகர் ஷாருக்கான் பார்த்து தல அஜித் கற்றுக்கொண்ட அந்த ஒரு விஷயம்!

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் அஜித். ரசிகர் மன்றங்களை களைத்த பிறகும் கூட நடிகர் அஜித்தின் படங்களுக்கான ஓபனிங் குறைவது இல்லை, மேலும் ஸ்கிரீனில் அவர் வந்தாலே போதும் என்று நினைக்கும் ரசிகர்கள் பலர் இருக்கிறார்கள். குறிப்பாக ரசிகர் ரசிகர் மன்ற விழா, படங்களின் ப்ரோமோஷன், ஆடியோ லான்ச் என எதிலும் கலந்து கொள்ளாமல் இயல்பான ஒரு மனிதனாக வாழ்ந்து வந்தாலும் நடிகர் அஜித்திற்கு எப்படி இவ்வளவு பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது என பல முன்னணி நடிகர்களும் வியந்தது உண்டு.

அஜித் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியானது. அந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. 300 கோடிக்கு மேல் வசூல் செய்த துணிவு திரைப்படம் அஜித்திற்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்திருந்தது. மேலும் துணிவு திரைப்படத்தில் நடித்து கொண்டிருந்தபோது அவர் தனது 62 ஆவது படத்தில் கமிட்டானார். முதலில் அந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. பிறகு அவர் வெளியேற மகிழ் திருமேனி இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. அதன்படி மகிழ் இயக்கம் அஜித்தின் 62வது படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் அப்டேட் குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை என்றாலும் முதற்கட்ட சூட்டிங் அஜர்பைஜானில் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. மேலும் அடுத்த ஷெடியூல் சென்னை, அபுதாபியில் நடக்கலாம் என கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் அஜித் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும், அஜித்திற்கு ஜோடியாக திரிஷா நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அஜித்குமார் இந்த படத்துக்கு பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கலாம் என்று வெற்றி மாறன் இயக்கத்தில் நடிக்கலாம் என்றும் தகவல் உலாவுகின்றன.

விஜய்யை நேரில் பார்க்க கேரவன் முன் காத்திருந்த அஜித்! அதன்பின் நடந்த அதிரடி!

அடுத்தடுத்து பல முன்னணி இயக்குனர்களுடன் கைகோர்த்து நடித்து வரும் அஜித் ஒரே ஒரு ஹிந்தி படத்தில் நடித்திருக்கிறார். சந்தோஷ் சிவன் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளியான அசோகா படத்தில் நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து தல அஜித் நடித்திருப்பார். இந்நிலையில் அசோகா படத்தில் நடித்தது குறித்து அஜித் பேசியிருக்கும் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் நடிகர் அஜித் கொடுத்த அந்த பேட்டியில், நடிகர் ஷாருக்கான் எனக்கு ரொம்பவே பிடிக்கும், அவருடன் நடிப்பது நல்ல அனுபவத்தை தரும் என்று நம்பினேன். அதே நேரம் அசோகா படத்தில் நடித்த அனுபவத்தை தாண்டி ஷாருக்கானிடம் நிறைய கற்றுக் கொண்டேன். அதே நேரத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவருடைய காட்சிகள் படமாக்கப்பட்டு முடித்த பின்னும் ஓய்வெடுக்காமல் மற்ற வேலைகளை சுறுசுறுப்பாக செய்து கொண்டிருப்பார்.அது எனக்கு ஆச்சரியத்தை தந்தது. அவர் சுறுசுறுப்பாக இருந்ததால் மொத்த யூனிட்டுமே அப்படி இயங்கியது. இந்த விஷயத்தை அவரிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன் என அஜித் அந்த பேட்டியில் மிகப் பெருமையாக கூறியிருந்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.