விருமாண்டிக்கு பிறகு கமல் படத்தில் மீண்டும் ‘அபிராமி’

மிகப்பிரபலமான இயக்குனர் அடூர் கோபால கிருஷ்ணன் படத்தில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் அபிராமி. கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் என்பதால், அங்கேயேதான் படித்து வளர்ந்திருக்கிறார். இளம் பருவத்தில், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் வர்ணனையாளராக பணியாற்றி இருக்கிறார்.

தொலைக்காட்சியின் மூலம் மலையாள திரையுலகிற்கும், மக்களுக்கும் பரிட்சயமான முகமாக மாறியிருக்கிறார் அபிராமி. இயற்பெயர் திவ்யா கோபிகுமார் ஆனால், கமல் நடித்த குணா படத்தின் தாக்கத்தால், அந்த படத்தில் கதாநாயகியின் கதாபாத்திர பெயரான அபிராமி என்பதையே தன்னுடைய  பெயராக  மாற்றி இருக்கிறார்.

தமிழ், மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்தாலும், தமிழ் மற்றும் மலையாள படங்களே அபிராமி நடித்ததில் அதிகம். தமிழில் அர்ஜூனுடன் நடித்த வானவில் படம்தான் முதல் படம். இந்த படம் ஓரளவிற்கு வெற்றியை அடைந்தது. அதன் பின் தொடர்ந்து படங்கள் வந்து குவிந்தது.

மிடில் கிளாஸ் மாதவன்,தோஸ்த்,சமுத்திரம்,சார்லி சாப்ளின் என தொடர்ந்து நல்ல படங்களில் நடித்து வந்தார். சமுத்திரம் படத்திலும் நல்ல கதாபாத்திரம் அபிராமிக்கு அமைந்தது. மம்முட்டி தமிழில் நடித்த கார்மேகம் படத்தில் உடன் நடித்திருந்தார்.

இதன் பின் 2004ல் கமலுடன் நடித்த விருமாண்டி படம் அவருக்கு நல்ல படமாக அமைந்தது. அதில் அபிராமியின் நடிப்பு பாராட்டவும் செய்தனர். அன்னலெட்சுமி எனும் அவருடைய கதாபாத்திரம் பேசும்படியாக அமைந்தது. ஆனால் அதன் பின் அவர் படங்களில் எதும் நடிக்காமல் ஒதுங்கி விட்டார். நீண்ட இடைவெளிக்கு பின் ஜோதிகா நடித்த 36 வயதினிலே படத்தில் சப்போர்டிங் ரோலில் நடித்திருந்தார்.

கமலில் விஸ்வரூபம் மற்றும் உத்தமவில்லன் படத்தில் பூஜா குமாருக்கு டப்பிங் செய்திருக்கிறார். தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தக் லைஃப் படத்தில் அபிராமி கமலுடன் நடிக்கப்போவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வந்துள்ளன.

2004ம் ஆண்டில் நடித்த விருமாண்டி படத்திற்கு பிறகு அபிராமி கமலுடன் இணைந்து நடிக்கபோகும் படம் இதுவே. மணிரத்தினத்தின் இயக்கத்தில் அபிராமி நடிக்க போகும் முதல் படம் இதுதான். அது எப்படிப்பட்ட கேரக்டராக இருக்கும் என்பதை பார்க்க இப்பொழுதே ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.