அவர் எனக்கு சாமி மாதிரி.. விஜயகாந்த் ஃபோட்டோவை வீட்டில் மாட்டி வைத்த பிரபல நடிகர்.. கலங்க வைக்கும் பின்னணி!

தமிழ் சினிமாவின் தொண்ணூறுகளில் சிறந்த நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். கேப்டன் என மக்களால் அன்பாக அழைக்கப்படும் அவர், மக்களுக்காக போராடும் கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அதேபோல விஜயகாந்த் நடிக்கும் திரைப்படங்களில் ஆக்சன் காட்சிகள் படு பயங்கரமாகவும், மக்களைக் கவரும் வகையிலும் இருக்கும். தேமுதிக என்ற கட்சியை ஆரம்பித்து அரசியலில் ஈடுபட தொடங்கிய விஜயகாந்த், 2010 ஆம் ஆண்டுக்கு பிறகு பெரிதாக திரைப்படங்களில் நடிப்பதில்லை. இதற்குக் காரணம் அவரது உடல்நிலை மோசமானது தான். கடந்த சில ஆண்டுகளாகவே பொது வெளியில் அதிகம் தோன்றாமல் இருக்கும் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து அவ்வபோது அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்த வண்ணம் தான் உள்ளது.

அந்த வகையில், சமீபத்தில் அவரது உடல்நிலை பற்றி மருத்துவமனை சார்பில் அறிக்கை ஒன்று வெளியாகி இருந்தது. அதன்படி, அவருக்கு நுரையீரலில் பிரச்சனை உள்ளதாகவும், இன்னும் 14 நாட்கள் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. நிஜ வாழ்க்கையிலும் மக்களின் நாயகனாக வாழ்ந்துள்ள விஜயகாந்த், சினிமாவில் இருப்பவர்களுக்கும் பொது மக்களுக்கும் என எராளமான உதவிகளை மேற்கொண்டுள்ளார்.

நடிகர் என்ற ஆணவத்தை தலையில் ஏற்றாமல், எல்லோராலும் எளிதில் பழகக்கூடிய இடத்தில் இருந்த தங்கமான மனிதனுக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டுள்ளது, அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. விரைவில் அவர் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்றும் ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்.

அப்படி இருக்கையில், பல பிரபலங்கள் நடிகர் விஜயகாந்த் குறித்து பேசும் உருக்கமான காணொளிகள் தற்போது இணையத்தில் வைரலான வண்ணம் உள்ளது. அந்த வகையில், நடிகர் பொன்னம்பலம் விஜயகாந்தை கடவுள் ரூபத்தில் பார்ப்பதாக உருக்கமான கருத்துக்களை குறிப்பிட்டிருந்தார்.
Ponnambalam Vijayakanth

தமிழ் சினிமாவின் படு பயங்கரமான வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்த பொன்னம்பலம், சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமல் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் போராடி வந்தார். இறுதியில், பலரின் உதவியால் அவர் சற்று உடல்நலம் பெற்று திரும்பிய சமயத்தில் சில நேர்காணல்களில் விஜயகாந்தை பற்றி பேசி இருந்தார்.

“என் வாழ்க்கையோட தரத்துல 90 சதவீதத்தை மாத்துனதே விஜயகாந்த் தான். என் தங்கச்சி கல்யாணத்துக்கு 2 நாள் முன்னாடி பணமில்லாம உட்காந்துட்டு இருந்தேன். 2 மாசம் கழிச்சு தான் ஷூட்டிங். அந்த நேரத்துல விஜயகாந்த் சார் கால் பண்ணப்போ என் சூழ்நிலையை சொன்னேன். அதுக்காக ஷூட்டிங்கை அடுத்த நாளே முடிச்சு எனக்கான சம்பளத்தோட தங்கச்சி கல்யாணத்துல வந்து முதல் ஆளா விஜயகாந்த் உட்காந்துட்டு இருந்தாரு.
ponnambalam

விஜயகாந்த் சார் எனக்கு தெய்வம் மாதிரி. அவரு வீட்டுக்கு போனா நான் செத்துருவேன். அவரு மனுஷன் இல்ல தெய்வம். என் வீட்டுல கூட விஜயகாந்த் போட்டோ இருக்கும். வேற யார் போட்டோவும் கிடையாது” என பொன்னம்மபலம் கலங்கியபடி கூறி இருப்பார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.