ரஜினியின் ஜெயிலர் படத்திற்கு போட்டியாக களமிறங்கும் ஜெயிலர் படம்!

Published:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் ரவிச்சந்தர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார், மேலும் படத்தின் முதல் 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

முதல் பாடலான காவாலா சமூக வலை தளங்களில் 250 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது, அதை தொடர்ந்து அடுத்த பாடலான ஹூக்கும் பாடலும் வைரலாகி இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது, மேலும் இந்த பாடல்களுக்கு பல பிரபலங்கள் ரீல்ஸ் செய்து வெளியிட்டு வருகின்றனர்.

தமன்னா, மோகன்லால், சிவ ராஜ்குமார் மற்றும் ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு என பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்த இந்த படம் ஆகஸ்ட் 10 தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் முன்னணி ஹீரோக்களின் படத்திற்கு போட்டியாக சில படங்கள் அதே நாளில் வெளிவருவது வழக்கம். அந்த வகையில் ரஜினியின் ஜெயிலர் படத்திற்கு போட்டியாக திரையில் மோத மலையாளத்தில் ஜெயிலர் திரைப்படம் தயாராக உள்ளது.

மலையாளத்தில் ஜெயிலர் படத்தை சாக்கீர் இயக்கத்தில் தயான் ஸ்ரீனிவாசன் நடித்துள்ளார். மேலும் மலையாள ‘ஜெயிலர்’ இயக்குனர், ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பதற்கு முன்பே, ஆகஸ்ட் 2021இல் கேரள திரைப்பட வர்த்தக சபையில் தலைப்பைப் பதிவு செய்ததாகக் கூறுகிறார்.

ரஜினியுடன் நடிக்க மறுத்த விஜயகாந்த் பட நடிகை! காரணம் தெரிந்தால் அதிர்ச்சி தான்!

இந்த நிலையில் மலையாள ஜெயிலர் திரைப்படமும் த்ரில்லர் படமாக தோற்றமளிக்கிறது, இதில் தியான் ஸ்ரீனிவாசன் ஒரு ஜெயிலராக பலத்த பாதுகாப்பு சிறையில் இருந்து தப்பிய கைதிகளின் குழுவை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கதையில் கூறப்படுகிறது.

இந்த இரு மொழிப் படங்களின் தலைப்பில் இருந்து கதைக்களம் வரை ஒன்றாக இருப்பதால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு தற்பொழுது அதிகரிக்க தொடங்கியுள்ளது.

மேலும் உங்களுக்காக...