முந்தானை முடிச்சி ஹீரோயினின் 700வது படம்! ரிலீஸ் குறித்து மாஸ் அப்டேட்!

Published:

தமிழ் சினிமாவில் 1983ஆம் ஆண்டு வெளியான கே.பாக்யராஜ் நடித்து இயக்கிய முந்தானை முடிச்சு படத்தின் மூலம் ஊர்வசி கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அதை தொடர்ந்து அவர் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிப் படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

பழம்பெரும் நடிகை ஊர்வசி அவரது 700வது படமான அப்பத்தா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லரில் கிராமத்தில் தன் வாழ்நாள் முழுவதையும் வாழ்ந்து கழித்த அப்பத்தா என்று அழைக்கப்படும் கண்ணம்மாவின் உலகத்திற்கு பார்வையாளர்களை அழைத்துச் செல்கிறது.

இந்த படத்தின் கதையாக கணவனை இழந்த அப்பத்தா தன் மகனை தனியாக வளர்த்து வருகிறார், அதே நேரத்தில் தன் தொழிலில் தனக்கென ஒரு பெயரையும் உருவாக்கியுள்ளார். சுயமரியாதையுடன் தைரியமாக வாழ்ந்து வரும் அப்பத்தாவின் ஒரே பயம் நாய்கள் தான்.

இந்த நேரத்தில் பல வருடங்கள் கழித்து தன் மகனிடம் இருந்து அழைப்பு வர சென்னை செல்லும் அப்பத்தாவிற்கு அங்கு தான் ஆபத்து உள்ளது. தன் மகன் வீட்டில் இருக்கும் நாயை பார்த்துக்கொள்ளும் பொறுப்பும் அவரை வந்தடைகிறது. அந்த நாயை அப்பத்தா எப்படி திறமையாக கையாளுகிறார் என்பது தான் மீதிக்கதை. மகனின் மீது உள்ள பாசம், நாயின் மீது உள்ள பயம் இரண்டிற்கு இடையில் படம் சுவாரஸ்யமாக நகர்கிறது.

ரஜினியுடன் நடிக்க மறுத்த விஜயகாந்த் பட நடிகை! காரணம் தெரிந்தால் அதிர்ச்சி தான்!

இந்த படத்தை பற்றி நடிகை ஊர்வசி கூறுகையில், எனது 700வது படமான அப்பத்தா ஒரு அசாதாரண அனுபவமாக இருந்தது மற்றும் என் இதயத்தில் ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளது. குடும்பப் பிணைப்புகள், தனிப்பட்ட உணர்ச்சி மற்றும் நம் அச்சங்களை எதிர்கொள்வதன் முக்கியத்துவத்தின் சாராம்சத்தை கதை அழகாக படமாக்கியுள்ளது.

பிரியதர்ஷன் இயக்கத்தில் திறமையான குழுவுடன் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் ‘அப்பத்தா’ திரைப்படம் மக்களின் மனதில் இடம் பிடிக்கும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ‘அப்பத்தா’ திரைப்படம் ஜூலை 29 முதல் OTTயில் நேரடியாக திரையிடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

 

மேலும் உங்களுக்காக...