கடந்த 70களில் ஜேம்ஸ்பாண்ட் பாணி படங்களில் நடித்தவர் ஜெய்சங்கர் என்பதும் அவரது பல படங்கள் துப்பறியும் கதை அம்சம் கொண்டது என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் எடுக்கப்பட்ட படம் தான் துணிவே துணை.
ஜெய்சங்கர் இரண்டு வேடத்தில் நடித்த இந்த படத்தில் ஜெயபிரபா என்பவர் நாயகியாக நடித்திருப்பார். விஜயகுமார், ராஜசுலோசனா, அசோகன், செந்தாமரை, சுருளி ராஜன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருப்பார்கள். எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் பஞ்சு அருணாச்சலம் வசனத்தில் உருவான இந்த படம் கடந்த 1976ஆம் ஆண்டு ஏப்ரல் ஆறாம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.
ஒருமுறை அல்ல, இருமுறை அல்ல.. 17 முறை ஒரே நாளில் வெளியான சிவாஜியின் இரண்டு படங்கள்.. பெரும் சாதனை..!
இந்த படத்தின் கதைப்படி ஒரு மர்மமான கிராமத்திற்கு சிஐடி அதிகாரி விஜயகுமார் செல்வார். ஆனார் அவர் மர்மமான முறையில் இறந்து விடுவார். தனது அண்ணன் விஜயகுமாருக்கு என்ன ஆயிற்று என்பதை பார்ப்பதற்காக ஜெய்சங்கர் அதே கிராமத்துக்கு செல்வார். அப்போது அவர் பல மர்மங்களை கண்டுபிடிப்பார்.
அந்த ஊரில் ஒரு கொள்ளை கூட்ட தலைவி இருக்கிறார் என்று தெரிந்து கொண்டு அவரையும் கண்டுபிடிப்பார். ராஜசுலோசனா தான் அந்த கொள்ளை கூட்டத்தின் தலைவி. அவர் பின்னால் இருக்கும் மர்மம் என்ன? அவர்கள் செய்யும் மோசடி என்ன? என்பதை கண்டுபிடிப்பது தான் இந்த படத்தின் கதை. ஒரு கட்டத்தில் ஜெய்சங்கர் இறந்து விடுவது போன்றும் அதன் பிறகு மீண்டும் இன்னொரு ஜெய்சங்கர் வருவது போன்றும் காட்சிகள் இருக்கும்.
இந்த படத்தின் கிளைமாக்ஸில் வித்தியாசமான சண்டைக் காட்சி அமைக்க வேண்டும் என்று முடிவு செய்து ஹெலிகாப்டர் சண்டைக்காட்சி அமைத்து இருப்பார்கள். அனேகமாக தமிழ் படத்தில் ஹெலிகாப்டர் முதன்முதலில் தோன்றியது இந்த படத்தில் தான் இருக்கும்.
ஒரே டைட்டில், ஒரே கதை.. ஒரே நாளில் தனித்தனியாக விளம்பரம் கொடுத்த எம்ஜிஆர் – சிவாஜி..!
இந்த படத்தில் ஹெலிகாப்டரை பயன்படுத்துவதற்காக இரண்டு நாட்கள் வாடகைக்கு எடுத்து படமாக்கப்பட்டது. மகாபலிபுரம் கடற்கரை மற்றும் கோவளம் கடற்கரையில் தான் ஹெலிகாப்டர் ஸ்டண்ட் காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஹெலிகாப்டர் சண்டை காட்சிகள் தத்ரூபமாக இருக்கும் என்பதால் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு த்ரில்லாக இருக்கும்.
பொதுவாக ஒரு திரைப்படத்தில் கடைசி அரை மணி நேரம் தான் த்ரில்லாக இருக்கும், ஆனால் இந்த படத்தில் முதல் அரை மணிநேரமே த்ரில்லாக இருக்கும். அதுவும் கொள்ளை கூட்டத்தின் தலைவி பெண் ஒரு வில்லி என்பதும் சுவாரஸ்யமாக இருக்கும்.
இந்த படத்தில் ஏகப்பட்ட ஸ்டண்ட் காட்சிகள் இருக்கும். அனைத்தும் ஆக்சன் பிரியர்களுக்கு விருந்தாக இருக்கும். இந்த படம் வசூல் அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. சில வருடங்கள் கழித்து மீண்டும் ரிலீஸாகி வசூலை அள்ளியது.
தங்க சுரங்கம்: சிவாஜி கணேசன் நடித்த ஒரே ஒரு ஜேம்ஸ்பாண்ட் பாணி திரைக்கதை..!
ஜெய்சங்கரின் திரை உலக வாழ்வில் முக்கியமான படங்கள் என்றால் அதில் துணிவே துணை படத்திற்கு கண்டிப்பாக இடம் இருக்கும்.