ஒருமுறை அல்ல, இருமுறை அல்ல.. 17 முறை ஒரே நாளில் வெளியான சிவாஜியின் இரண்டு படங்கள்.. பெரும் சாதனை..!

தற்போதைய மாஸ் நடிகர்களின் திரைப்படம் வருடத்திற்கு ஒன்று வருவதே அதிசயமாக இருக்கும் நிலையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒருமுறை அல்ல, இருமுறையல்ல, 17 முறை ஒரே நாளில் இரண்டு படங்களை ரிலீஸ் செய்து சாதனை செய்துள்ளார். இந்திய திரை உலகில் இப்படி ஒரு சாதனையை வேறு யாராவது செய்திருப்பார்களா என்பது சந்தேகமே.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பல சாதனைகளை படைத்துள்ளார். அவரது சாதனைகளை அவரே பலமுறை உடைத்து உள்ளார். அந்த வகையில் ஒரே நாளில் இரண்டு படங்கள் ரிலீஸானதில் சிவாஜி கணேசன்தான் முன்னிலையில் இருக்கிறார்.

ஒரே டைட்டில், ஒரே கதை.. ஒரே நாளில் தனித்தனியாக விளம்பரம் கொடுத்த எம்ஜிஆர் – சிவாஜி..!

முதல் முறையாக சிவாஜி கணேசன் நடித்த ‘மனோகரா’ என்ற திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் ஒரே நாளில் ரிலீஸ் ஆனது. இந்த படங்களை ஒரே நாளில் வெளியான வெவ்வேறு படங்கள் என்று கூற முடியாது என்றாலும் மூன்று மொழிகளிலும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

sivaji1

1954ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி சிவாஜி கணேசன் நடித்த ‘தூக்கு தூக்கி’ மற்றும் எம்ஜிஆர், சிவாஜி இணைந்து நடித்த ‘கூண்டுக்கிளி’ ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகின. இரண்டுமே சிவாஜி கணேசனுக்கு மறக்க முடியாத படங்களாக அமைந்தன.

1955ஆம் ஆண்டு ‘கோடீஸ்வரன்’, ‘கள்வனின் காதலி’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியானது. இதில் ‘கள்வனின் காதலி’ வெற்றி பெற்று சாதனை படைத்தாலும் ‘கோடீஸ்வரன்’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

1956ஆம் ஆண்டு ‘நான் பெற்ற செல்வம்’ மற்றும் ‘நல்ல வீடு’ ஆகிய இரண்டு படங்கள் ஒரே நாளில் வந்தது. இதில் ‘நான் பெற்ற செல்வம்’ வசூலில் சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து 1959ஆம் ஆண்டு ‘அவள் யார்’, ‘பாகப்பிரிவினை’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் 1960ஆம் ஆண்டு ‘பாவை விளக்கு’, ‘பெற்ற மனம்’ ஆகிய இரு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகின.

sivaji2

1961ஆம் ஆண்டு ‘எல்லாம் உனக்காக’, ‘ஸ்ரீ வள்ளி’ ஆகிய திரைப்படங்களும், 1964ஆம் ஆண்டு ‘நவராத்திரி’ மற்றும் ‘முரடன் முத்து’ ஆகிய திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாகின. இதில் ‘நவராத்திரி’, ‘முரடன் முத்து’ ஆகிய இரண்டு படங்களும் வெற்றி பெற்றன.

அன்பு நடமாடும் கலைக்கூடமே… சிவாஜியின் அற்புதமான நடிப்பில் உருவான அவன்தான் மனிதன்!

1967ஆம் ஆண்டு தீபாவளி அன்று சிவாஜி கணேசன் நடித்த ‘ஊட்டி வரை உறவு’, ‘இரு மலர்கள்’ ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகின. ஒன்று வண்ண படம், இன்னொன்று கருப்பு வெள்ளை படமாக இருந்தாலும் இரண்டு படங்களுமே 100 நாள் ஓடி சாதனை செய்தது.

1970ஆம் ஆண்டு ‘விளையாட்டு பிள்ளை’ மற்றும் ‘தர்பி’ என்ற ஹிந்தி படம் ஒரே நாளில் வெளியானது. அதே ஆண்டில் ‘எங்கிருந்தோ வந்தாள்’ மற்றும் ‘சொர்க்கம்’ ஆகிய படங்களும் ஒரே நாளில் வெளியாகின. இரண்டுமே வெற்றி படங்களாக அமைந்தது.

sivaji4

1971ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் சிவாஜி கணேசன் நடித்த ‘சுமதி என் சுந்தரி’ மற்றும் ‘பிராப்தம்’ ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியான. இதில் ‘பிராப்தம்’ திரைப்படம் சாவித்திரியின் சொந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது. 1975ஆம் ஆண்டு ‘வைரநெஞ்சம்’, ‘டாக்டர் சிவா’ ஆகிய படங்களும், 1982ஆம் ஆண்டு ‘பரீட்சைக்கு நேரமாச்சு’, ‘ஊரும் உறவு’ ஆகிய படங்களும் ஒரே நாளில் வெளியானது.

1984ஆம் ஆண்டு ‘இரு மேதைகள்’ மற்றும் ‘தாவணி கனவுகள்’ ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகின. அதேபோல் 1987ஆம் ஆண்டு ‘ஜல்லிக்கட்டு’ மற்றும் ‘கிருஷ்ணன் வந்தான்’ ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகின.

sivaji3

தங்க சுரங்கம்: சிவாஜி கணேசன் நடித்த ஒரே ஒரு ஜேம்ஸ்பாண்ட் பாணி திரைக்கதை..!

தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு முறை அல்ல, இருமுறை அல்ல, 17 முறை ஒரே நாளில் இரண்டு படங்களை வெளியிட்டு சாதனை செய்த ஒரே நடிகர் சிவாஜி கணேசன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...