Bigg Boss Tamil Season 8 : கெளம்புற நேரத்துலயும் கண்ணீருடன் முத்துவிடம் ஜாக்குலின் சொன்ன வார்த்தை..

பிக் பாஸ் நிகழ்ச்சி ஃபைனலை நெருங்கி வரும் நிலையில் தங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களுக்கு அனைத்து பார்வையாளர்களும் வாக்களிப்பதில் மும்முரம் காட்டி வருகின்றனர். இதற்கு மத்தியில் தான் யாரும் எதிர்பாராத ஒரு பரபரப்பான சம்பவம் அரங்கேறி…

Jacquline Words to Muthu

பிக் பாஸ் நிகழ்ச்சி ஃபைனலை நெருங்கி வரும் நிலையில் தங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களுக்கு அனைத்து பார்வையாளர்களும் வாக்களிப்பதில் மும்முரம் காட்டி வருகின்றனர். இதற்கு மத்தியில் தான் யாரும் எதிர்பாராத ஒரு பரபரப்பான சம்பவம் அரங்கேறி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக இறுதி போட்டிக்கு முன்னேறுவார் என கருதப்பட்ட தீபக், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து திடீரென வெளியேறியது அனைவரையுமே அதிர்ச்சி அடைய வைத்திருந்தது.

அவரை விட சுமாராக ஆடிய போட்டியாளர்கள் தொடர்ந்து தக்க வைக்கப்பட, தீபக் எலிமினேட் ஆனது ரசிகர்கள் மத்தியிலும் விமர்சனத்தை உண்டு பண்ணியிருந்தது. அப்படி ஒரு சூழலில் தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு போட்டியாளர்களும் குறிப்பிட்ட தொகையை வெளியே சென்று குறிப்பிட்ட நொடிகளுக்குள் எடுக்க வேண்டும் என்று பிக் பாஸ் அறிவுறுத்தி இருந்தது.

கண்ணீர் விட்ட ஜாக்குலின்

ஒருவேளை அதை எடுக்க தவறினால் அவர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் சூழலும் உருவாகும் என ட்விஸ்ட்டும் காத்திருக்க அந்த ரிஸ்க்கையும் பல போட்டியாளர்கள் தைரியமாக எதிர் கொண்டிருந்தனர். அந்த வகையில் ரயான், முத்துக்குமரன், விஷால் உள்ளிட்ட பலரும் வெளியே இருந்த தொகையை குறிப்பிட்ட விநாடிக்குள் எடுத்து மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்திருந்தனர். ஆனால் ஜாக்குலினோ இரண்டு நொடிகள் தாமதமாக வந்ததால் அவர் குறிப்பிட்ட நேரத்திற்குள் பணத்தை எடுத்துக் கொண்டு திரும்பி பிக் பாஸ் வீட்டுக்கு வரவில்லை.

இதனால் அதிர்ச்சிகரமாக ஜாக்குலின் வெளியேற வேண்டும் என்றும் பிக் பாஸ் அறிவித்திருந்தார். பணம் எடுக்காமல் போனதற்காக சிறந்த போட்டியாளராக கருதப்பட்டு டைட்டில் வின்னர் ஆவதற்கான வாய்ப்புள்ளவராகவும் கருதப்பட்ட ஜாக்குலின் வெளியேறியது கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அப்படி ஒரு சூழலில் ஜாக்குலின் வெளியேறிய சமயத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த யாருமே பேசாமல் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தனர்.

நீ ஜெயிச்சுட்டு வா..

அந்த சமயத்தில் ஜாக்குலினுக்கு நெருக்கமான முத்துவும் பேச வார்த்தைகள் இல்லாமல் என்ன நடந்து கொண்டிருக்கிறது என தெரியாமல் இருந்தார். இதற்கு மத்தியில் தான் கண்ணீருடன் வெளியேறிய ஜாக்குலினிடம் பேசும் முத்து, ‘இங்கே என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. சிறப்பாக ஆடுபவர்கள் அனைவரும் வெளியே சென்றால் என்ன செய்வது?’ என புலம்புகிறார்.

இதற்கு பதில் சொல்லும் ஜாக்குலின், “எனக்காக நீ வென்று விட்டு வெளியே வா. நான் வெளியே செல்வதால் உனக்கு ஒரு நல்லது நடக்கட்டும்” என்று கண்ணீருடன் கூறுகிறார். இதற்கு பதில் சொல்லும் முத்துக்குமரன், நன்றாக ஆடுபவர்கள் எங்கே செல்கிறார்கள் என மீண்டும் கேட்கிறார்.