Bigg Boss Tamil Season 8 Day 103: அழியா நினைவுகளை படமாக்கி காட்டிய பிக் பாஸ்… எமோஷனலான இறுதி போட்டியாளர்கள்…

Bigg Boss Tamil Season 8 Day 103 மிகவும் எமோஷனலாக சென்றது. இந்த பிக் பாஸ் என்பது ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் ஒரு அழியா நினைவுகளையும் பாடத்தையும் கற்றுத் தந்து இருக்கும். எப்போதும் நம்முடைய…

bigg boss

Bigg Boss Tamil Season 8 Day 103 மிகவும் எமோஷனலாக சென்றது. இந்த பிக் பாஸ் என்பது ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் ஒரு அழியா நினைவுகளையும் பாடத்தையும் கற்றுத் தந்து இருக்கும். எப்போதும் நம்முடைய நினைவுகளை நம் மனக்கண்ணில் தான் பார்க்க முடியுமே தவிர நிஜ கண்ணில் பார்ப்பது அரிது. ஆனால் அந்த வாய்ப்பை பிக் பாஸ் எல்லோருக்கும் வழங்குகிறது. அவர்களின் அழியா நினைவுகளை படம் போட்டு காட்டியது.

bb 8 1

ஆக்டிவிட்டி ஏரியாவுக்கு சென்று டாப் 5 போட்டியாளர்கள் அவர்களது பயண வீடியோவை பார்த்து ரசித்தனர். அனைவரும் எமோஷனாகி கண்ணீர் சிந்தினர். இந்த வீட்டில் நாங்கள் இவ்வளவு விஷயங்கள் செய்திருக்கிறோமா என்று ஆச்சரியப்பட்டனர். இந்த வாய்ப்பு கிடைத்ததற்கு நாங்கள் மிகவும் பாக்கியம் செய்திருக்கிறோம் என்று நினைக்கிறோம் என்று பேசினர்.

இந்த நாள் மிகவும் எமோஷனாக சென்றது. முன்னாள் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களது கருத்துக்களை சொல்லிக் கொண்டும் விளையாடிக் கொண்டும் இறுதி நாட்களில் இந்த பிக் பாஸ் வீட்டில் இருக்கிறோம் இனி திரும்ப நினைத்தாலும் கூட இந்த வீட்டிற்குள் நம்மால் வர முடியாது என்று இருக்கிற ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவித்து ஜாலியாக இருந்தனர்.

bb 9

டாப் 5 போட்டியாளர்களின் பயண வீடியோவை பார்க்கும்போது நன்றாக இருந்தது. உண்மையிலேயே இந்த பிக் பாஸ் பயணம் என்பது ஒரு மேஜிக் தான். அதனால்தான் அனைவரையும் அது கட்டி இழுத்து வைத்திருக்கிறது. இன்னும் இரண்டு நாட்கள் தான் இந்த பயணம் முடிய இருக்கிறது. யார் வெற்றியாளர் என்பதை இப்போதே ஒரு சிலர் கணித்து கூறிக் கொண்டிருக்கிறார்கள். என்ன நடக்கிறது என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.