Bigg Boss Tamil Season 8 Day 102 இல் இதுபோல இதுவரை நடந்த சீசன்களில் மிகவும் ஒரு மனதை கலங்க வைக்கக்கூடிய பாரமாக்கக்கூடிய ஒரு எபிசோடு இருந்ததில்லை என்று சொல்லலாம். இந்த பணப்பெட்டி டாஸ்க் அப்படி புரட்டி போட்டு விட்டது. இன்றைய பணப்பெட்டி டாஸ்க் முதலில் பவித்ரா சென்றார். பவித்ரா வருவாரா வரமாட்டாரோ என்று அனைவரும் சந்தேகித்த நிலையில் மின்னல் வேகத்தில் சென்று பணப்பெட்டி எடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டார். பிக் பாஸே பாராட்டினார்.
அதற்கு அடுத்ததாக விஷால் பணப்பெட்டி எடுப்பதற்கு சென்றார். அவரும் குறித்த நேரத்தில் வந்துவிட்டார். ஆனால் கடைசியாக இறுதியாக பிக் பாஸ் 8,00,000 ரூபாய் பணத்தை வைத்தார். அதுவும் மிகவும் தூரமாக இருந்தது. இந்த தூரத்தை கடக்க ஜாக்குலின் முன்வந்தார். ஆனால் முடியுமா என்று பலர் கேட்டபோதும் முடியும் என்று கூறி சென்றார்.
ஆனால் ஆரம்பத்திலேயே அவர் மிகுந்த பயத்துடனும் எமோஷனலாகவும் தான் இருந்தார். அவருக்கு கொடுக்கப்பட்ட நேரத்தில் இரண்டு வினாடிகள் தாமதமாக வந்ததால் அவர் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று பிக் பாஸ் கூறினார். இதை யாருமே எதிர்பார்க்கவில்லை. ஜாக்குலின் மிகவும் மனமுடைந்து விட்டார். எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடந்துவிட்டது என்று அழுதார். இது அனைவரையும் மனதை கலங்க வைத்தது.
எல்லாருடைய பிக் பாஸ் ஃபேக் டிராபியை உடைக்க சொன்ன பிக் பாஸ் ஜாக்லினுக்கு மட்டும் உடைக்க வேண்டாம் நீங்கள் கையிலே எடுத்துக்கொண்டு போங்கள் நீங்கள் ரியல் வின்னர் தான் உள்ளே வெற்றி பெறாவிட்டால் என்ன வெளியே உங்களுக்கு வெற்றி காத்திருக்கிறது அந்த வெற்றி செய்தியோடு மீண்டும் நீங்கள் இந்த வீட்டிற்குள் வந்து அதை அறிவிப்பீர்கள் என்று பல ஆறுதல் வார்த்தைகள் கூறினார் பிக் பாஸ்.
ஏனென்றால் ஜாக்லின் உடைய எவிக்சன் யாருமே எதிர்பாராத ஒன்று. இந்த தடவை பிக் பாஸ் தொடங்கிய நாளிலிருந்து கடந்த 15 வாரங்களுக்கும் மேலாக நாமினேஷனில் இருப்பவர் ஜாக்குலின். அதனால் அவர் இறுதியாக பைனல் ஸ்டேஜ் வந்து நிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் ஜாக்லின் இந்த மாதிரி வெளியே சென்றது வருத்தமாக இருந்தது. இன்னும் இரண்டு நாட்களில் இந்த பிக்பாஸ் சீசன் 8 முடிவடைய உள்ள நிலையில் இருக்கிறது. ஆரம்பத்தில் என்னவோ இந்த சீசன் ஏதோ செல்கிறது என்று போல் இருந்தாலும் போகப்போக போட்டியாளர்களின் விளையாட்டு அவர்களது குணாதிசயங்கள் மக்களையும் இந்த நிகழ்ச்சிக்குள்ளே இழுத்து விட்டது என்று சொல்லலாம். யார் வெற்றியாளர் என்று காண்பதற்கு ஆவலாக தான் இருக்கிறது.