எனக்கு கண்ணீரே வரல.. டைரக்டர் இப்படி கேட்டுட்டாரு.. லவ் டுடே இவனா பகிர்ந்த தகவல்..!!

Ivana: 2022 ஆம் ஆண்டு காமெடி கலந்த படமாக வெளியானது லவ் டுடே. இந்த படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் தான் இதில் கதாநாயகனாக நடித்திருந்தார். இவனா கதாநாயகியாக நடித்த இந்த படத்தில் சத்யராஜ்,…

இவனா

Ivana: 2022 ஆம் ஆண்டு காமெடி கலந்த படமாக வெளியானது லவ் டுடே. இந்த படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் தான் இதில் கதாநாயகனாக நடித்திருந்தார். இவனா கதாநாயகியாக நடித்த இந்த படத்தில் சத்யராஜ், யோகி பாபு, ரவீனா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

கண்ணீர் விட்டு கலங்கிய செல்வராகவன்.. சைலண்டாக கலாய்த்து தள்ளிய இயக்குனர் அமீர்

யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த படத்தில் இடம்பெற்ற நான்கு பாடல்களை இயக்குனர் மற்றும் நடிகரான பிரதீப் ரங்கநாதன் தான் எழுதியிருந்தார். இந்த படத்தின் கதைப்படி பிரதீப் ரங்கநாதனும் கதாநாயகி இவனாவும் காதலிப்பார்கள்.

இதனைத் தொடர்ந்து இவனாவின் தந்தையான சத்யராஜ் பிரதிப்பை வீட்டிற்கு அழைத்து காதலர்கள் இருவரின் மொபைலையும் ஒருவருக்கொருவர் மாத்தி கொடுத்து விடுகிறார். இதில் இருந்து தான் படமே தொடங்கும்.

சிவாஜி கண்ணீர் மல்க ரஜினிக்கு எழுதிய கடிதம்.. அது என்ன தெரியுமா..?

போன் இருவரது கைகளிலும் மாறுவதால் காதல் ஜோடிக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகள் சண்டைகள் சச்சரவுகள் என அனைத்தையும் கடந்து இருவரும் ஒன்றிணைந்தார்களா என்பது தான் கதை. 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்து 100 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்த படத்தின் கிளைமாக்ஸில் இவனா அதிகமாக அழுதிருப்பார். அந்த காட்சி குறித்து ஒரு பேட்டியில் இவனா பகிர்ந்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, எனக்கு கண்ணீர் வருவது என்பது கடினமான ஒன்று. படத்தின் கிளைமாக்ஸில் அதிகமாக அழ வேண்டும் என்ற காட்சி எடுத்த போது கிளிசரின் கண்ணில் வைத்த பிறகும் கண்ணீர் வரவில்லை.

கண்ணீர் விட்டு கதறும் டிடிஎஃப் வாசன்! முதல் படத்துக்கே இந்த நிலைமையா?

அப்போது கிளிசரின் பாட்டிலோடு கண்ணுக்குள் ஊற்றிக் கொண்டிருந்தார்கள் அந்த சமயத்தில் அங்கு வந்த பிரதீப் கண்ணீர் வருவதற்கு கிளிசரின் போடுங்க. ஐ ட்ராப்ஸ் போட்டால் எப்படி கண்ணீர் வரும் என்று கேட்டார். அப்படி கண்ணீர் வருவது கஷ்டமான விஷயம்” என பகிர்ந்துள்ளார்.