கண்ணீர் விட்டு கதறும் டிடிஎஃப் வாசன்! முதல் படத்துக்கே இந்த நிலைமையா?

கோவையை சேர்ந்த பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் சென்னையில் ஏற்பட்ட விபத்து குறித்து விளக்கம் ஒன்றை டிடிஎஃப் வாசன் தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தற்பொழுது யூடியூபர் ஆக இருந்த டிடிஎஃப் வாசன் மஞ்சள் வீரன் என்று திரைப்படம் ஒன்றில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். இதுகுறித்து அறிவிப்பு வெளியானவுடன் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றாலும் அந்த படத்தின் போஸ்டர் குறித்து சர்ச்சை ஒன்று உருவானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில் சென்னையில் ஏற்பட்ட கார் விபத்து தொடர்பாகவும் பல செய்திகள் வெளியாகி வந்தது. இதில் பல செய்திகள் தவறான தகவல்களை கூறி வருவதாகவும் கார் விபத்து ஏற்பட்டது குறித்து விளக்கம் அளித்து டிடிஎப் வாசன் தனது youtube பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் நியூஸ் சேனல்களுக்கு நான் என்ன பாவம் செய்தேன், என்னை ஏன் இப்படி டார்கெட் செய்கிறார்கள் என்று டிடிஎஃப் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

மேலும் எந்த ஒரு ஊடகமாக இருந்தாலும் உண்மை தெரிந்தால் மட்டுமே பேச வேண்டும், இல்லையென்றால் பேசவே கூடாது என்றும் அதனை சிலர் மீறி வருகின்றனர் எனக் கூறியுள்ளார்.

சென்னையில் விபத்து ஏற்பட்ட காரை டிடிஎஃப் வாசன் ஓட்டி வந்ததாகவும், விபத்திற்கு பின் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடியதாகவும் சில செய்திகள் வெளியான நிலையில் அதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக பேசியுள்ளார். மேலும் விபத்து ஏற்பட்ட காரை தான் ஓட்டவில்லை என்றும் அதனை தனது படத்தின் இயக்குனர் தான் ஓட்டினார் என தெரிவித்துள்ளார்.

விஜய் தொடர்ந்து ஜெயிலர் பாடலை புகழ்ந்து தள்ளிய அஜித்! காரணம் என்ன தெரியுமா…

அத்துடன் நான் ஆட்டோவில் சென்றது உண்மைதான் ஆனால் தப்பி செல்லவில்லை என்று வீடியோவில் கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...