என் தங்கை மோனல் தற்கொலை பண்ணினது ரொம்ப தப்பு… அதுதான் என் வாழ்வின் கடினமான தருணம்… சிம்ரன் உருக்கம்…

Published:

1990 மற்றும் 2000 களில் புகழ்பெற்ற நடிகையாகவும் பெண் நடிகர்கள் சிறந்தவராகவும் விளங்கியவர் சிம்ரன். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்துள்ளார் சிம்ரன். தமிழ் திரை உலகில் மிகவும் திறமையான நடிகர்களில் ஒருவர் சிம்ரன்.

மும்பையில் பஞ்சாபி குடும்பத்தில் பிறந்த சிம்ரனின் இயற்பெயர் ரிஷி பாமா என்பதாகும். தூர்தர்ஷன் மெட்ரோ சேனலில் சூப்பர் ஹிட் முக்காபுலா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் திரையுலகில் நுழைந்தார் சிம்ரன். 1997 ஆம் ஆண்டு விஜய்க்கு ஜோடியாக ஒன்ஸ்மோர் திரைப்படத்தில் நடித்ததால் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமானார் சிம்ரன்.

அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடித்த சிம்ரன் 2000களில் மிக அதிக சம்பளம் ஆக 75 லட்சத்துக்கு மேல் வாங்கிய ஒரே நடிகை என்ற பெருமையைப் பெற்றார். நட்புக்காக, துள்ளாத மனமும் துள்ளும், கண்ணெதிரே தோன்றினாள், அவள் வருவாளா, வாலி, ஜோடி, பிரியமானவளே, பார்த்தேன் ரசித்தேன், கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார் சிம்ரன்.

2003 ஆம் ஆண்டு தனது நண்பரான தீபக் பாக்காவை திருமணம் செய்து கொண்ட சிம்ரன் சினிமாவில் இருந்து சற்று இடைவேளை எடுத்துக் கொண்டார். வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் நடித்து சிறந்த கம்பேக் கொடுத்தார் சிம்ரன். தொடர்ந்து அவ்வப்போது துணை நட்சத்திரங்களில் நடித்து வந்த சிம்ரன் தற்போது பிரசாந்த் உடன் அந்தகன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

தனது நடிப்பிற்காக சிம்ரன் மூன்று ஃபிலிம்பேர் விருதுகள், சிறந்த நடிகைக்கான விருது, சிறந்த துணை நடிகைக்கான விருது போன்ற விருதுகளை வென்றுள்ளார். தற்போது ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட சிம்ரன் மறைந்த தனது தங்கை மோனலை பற்றி உருக்கமாக பேசியுள்ளார்.

சிம்ரன் தங்கையான மோனல் தமிழ் சினிமாவில் வளர்ந்து வந்த பிரபல நடிகை ஆவார். இவர் விஜயின் பத்ரி மற்றும் குணால் உடன் பார்வை ஒன்றே போதுமே ஆகிய திரைப்படத்தில் நடித்தது மூலம் பிரபலமானார். தமிழ் சினிமாவில் பிரபலம் அடைந்து வந்த நேரத்தில் 2002 ஆம் ஆண்டு மோனல் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்ரன் கூறியது என்னவென்றால், என் தங்கை மோனல் இறந்ததாக செய்தி வந்ததும் முதலில் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது பின்னர் கோபம் வந்தது. எப்படி அவரால் காதலித்த ஒருத்தருக்காக தனது பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள் எல்லோரையும் மறந்து விட்டு தற்கொலை செய்ய முடிகிறது? எங்களை பற்றி எல்லாம் அவர் ஒரு நொடி கூட சிந்திக்கவில்லையா? என்ற கோபம் எனக்கு இருந்தது, வருத்தமும் அதைவிட அதிகமாக இருந்தது. என் வாழ்வில் மிகவும் கடினமான நாட்கள் என்றால் அதுதான் என்று உருக்கமாக பேசியிருக்கிறார் சிம்ரன்.

மேலும் உங்களுக்காக...