பிறந்த தேதி பலன்கள்: 1-ம் தேதியில் பிறந்தவரா நீங்கள்? உங்களுக்கான பலன்கள் இதோ!

By Gayathri A

Published:

Birthday Rasi Palan Day 1: கொள்கைப் படியே எல்லாம் நடக்க வேண்டும் என்று நினைக்கும் 1-ம் தேதியில் பிறந்தவர்களே! உங்களை வெளிப்படையாக விமர்சிக்க உங்களைச் சுற்றி இருப்பவர்கள் பயம் கொண்டு இருப்பதே உங்களின் பலமாகும்.

உங்களுடைய கம்பீரம் உங்களுக்குச் சாதகமானதாக இருக்கும்; உங்களுக்குச் சாதகமானவர்களை உங்களுக்கு நெருக்கமாக வைத்து அவர்களுக்காக வாழும் குணம் கொண்டவர்கள் நீங்கள்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கும் தெரியாத வகையில் ரகசியங்களைக் காப்பீர்கள். பாசப் பிரியமானவர்களான நீங்கள் பாசத்தை வெளிப்படையாகக் காட்டாமல் இருப்பீர்கள்.

எதிரியையும் கூட உங்களின் பேச்சுத் திறமையால் நண்பர்கள் ஆக்கிவிடுவீர்கள். அரசியலில் ஈடுபடுவோருக்கு வெற்றி, புகழ், செல்வாக்கு என அனைத்தும் கிடைக்கும்; மேலும் தலைமைப் பொறுப்பு உங்களைத் தேடி வரும்.

உங்கள் விருப்பப்படி மற்றவர்களை நடத்தும்படியான குணம் கொண்டவர்கள் நீங்கள். தாய், தந்தை மீது மிகவும் பய பக்தியுடனும், பாசத்துடனும் இருப்பீர்கள், வாழ்க்கைத் துணை, குழந்தைகளை மிகுந்த அக்கறையுடன் கவனித்துக் கொள்வீர்கள்.

நண்பர்களுக்காகவும், குடும்பத்திற்காகவும் எதையும் செய்யக்கூடிய மனம் கொண்டவர்கள் 1 ஆம் தேதியில் பிறந்தவர்கள். உங்களின் தைரியமும், தன்னம்பிக்கையும் உங்களின் மற்றுமொரு பலம். இது உங்களை வெற்றிக்கு இட்டுச் செல்லும். 1 ஆம் தேதியில் பிறந்தவர்கள் பெயர், புகழ், கௌரவம், செல்வாக்கு போன்றவற்றிற்காக ஆசைப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட தேதிகள் மற்றும் நிறம்

1 ஆம் தேதியில் பிறந்தவர்களுக்கான அதிர்ஷ்டத் தேதிகள் 1,10,19

நீங்கள் தவிர்க்க வேண்டிய தேதிகள்: 4,13, 22, 31, 26, 28

உங்களுக்கு உகந்த நிறம்: பொன் நிறம்

தவிர்க்க வேண்டிய நிறம்: கருப்பு நிறம்.

உங்களுக்கு உகந்த நவரத்தினக் கல் – மாணிக்கக் கல் பயன்படுத்தவும்; மேலும் இதனை வெள்ளியுடன் போடாமல் தங்கத்துடன் மட்டுமே போடவும்.

தொழில் துறை – மருத்துவத் துறை, பொறியியல், விஞ்ஞானத் துறை, இரசாயனத் துறை போன்ற துறைகள் உங்களுக்கு ஏற்ற துறைகளாகும்.

மற்றவர்களை அனுசரித்துப் போகும் குணத்தினைத் தவிர்த்தால் வாழ்க்கையில் நீங்கள் எண்ணும் காரியத்தினை அடையலாம். அரசு சார்ந்த பணிகளிலும், அரசியல் போன்ற அதிகாரம் சார்ந்த பணிகளிலும் அமர்வீர்கள்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

சூர்யன் வழிபாடு செய்து வருதல் வேண்டும்; சூர்ய நமஸ்காரம் காலை ஒருமுறை மாலை ஒருமுறை என்று ஒருநாளைக்கு இரண்டு முறை செய்து வருதல் வேண்டும்.

மேலும் காயத்ரி மந்திரத்தை ஒருநாளைக்கு 18 முறை சொல்லிவர வேண்டும்.

மேலும் உங்களுக்காக...