பாலினத்தை அறிவித்த விவகாரம்.. மன்னிப்பு கேட்ட யூடியூபர் இர்ஃபான்.. ஈஸியா தப்பிக்க முடியாதாம்!

Published:

பிரபல யூடியூபரான இர்ஃபான் சமீபத்தில் தன் மனைவி கர்பமாய் இருப்பதாக வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்த நிலையில் தற்போது தன் மனைவியின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் ஜெண்டர் ரிவீல் வீடியோவையும் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியதால் தற்போது மருத்துவதுறை குழுவிடம் மன்னிப்பு கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மன்னிப்பு கேட்ட இர்ஃபான்:

நடிப்பின் மீது மிகவும் ஆர்வம் கொண்ட இர்ஃபான் முதலில் பிரபலமாக யூடியூப் சேனல் ஒன்றை துவங்கி தன் எதார்த்தமான பேச்சால் ஃபுட் ரிவ்யூ செய்து உணவுப் பிரியர்களை கவர்ந்தார். ஆரம்ப காலத்தில் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்த இர்ஃபான் வீட்டு வாடகை கட்ட முடியாமல், மளிகை பொருட்களைக்கூட கடனில் வாங்கி தன் வாழ்க்கையை கடந்து வந்துள்ளார். மேலும், ஒரு விஷயத்திற்காக தொடர்ந்து உழைத்தால் நிச்சயமாக முன்னேற்றம் அடையலாம் என நினைத்து தொடங்கிய யூடியூப் சேனலில் தற்போது 4 மில்லியன் சப்ஸ்கிரைபருக்கு மேல் அள்ளியுள்ளார்.

உணவு வகைகளை சுவைப்பது, சினிமா படங்களை விமர்சிப்பது, பிரபலங்களை நேர்காணுதல், வெளிநாட்டு பயணங்கள், குடும்பத்துடன் கடக்கும் நேரங்கள் என பல வீடியோக்களை பகிர்ந்து இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்துள்ளார். மேலும், இர்ஃபானுக்கு தேசிய படைப்பாளிகள் விருதை பிரதமர் நரேந்திர மோடி வழங்கியுள்ளார்.

தொடர்ந்து உணவு உண்பதால் சில நேரங்களில் ஃபூட் பாய்சன் ஆகிவிடுவதால் வழக்கமாக இரண்டு மருத்துவமணைக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொள்வதாகவும் இர்ஃபான் கூறியிருந்தார். மேலும், அரசியல் தலைவர்களான கனிமொழி, உதயநிதி உள்ளிட்டோருடன் நேர்கானல் வீடியோ மிகவும் வைரலானது.

கடந்த ஆண்டு இர்ஃபான் – ஆல்யா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். தன் மனைவியுடன் பல இடங்களுக்கு சென்று வீடியோக்களை பகிர்ந்து வந்த நிலையில் சமீபத்தில் தன் மனைவி கர்பமாக இருப்பதாக தற்போது 7மாதம் என அறிவித்திருந்தார். ஆல்யா துபாயில் ட்ரிட்மெண்ட் எடுத்து வருவதால் ஜெண்டர் ரிவீல் என்பது அங்கு சட்ட விரோதம் இல்லை என நினைத்து அதை வீடியோவாக வெளியிட்டு வியூஸையும் காசையும் அள்ளினார்.

இர்ஃபான் வெளிப்படையாக ஜெண்டர் ரிவீல் செய்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சுகாதரத்துறை வீடியோவை நீக்குவதற்கும் இர்ஃபானுக்கு விளக்கம் கேட்டும் நோடிஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில் கருவின் பாலினத்தை அறிந்துக்கொள்வதே சட்டப்படி குற்றமாக இருக்கும் நம் நாட்டில் அதை வெளிப்படையாக அறிவித்து விதிமீறலில் ஈடுபட்டதால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக மருத்துவத்துறை எச்சரித்துள்ளது.
.
இர்ஃபான் வியூ யூடியூப் பக்கத்திலிருந்து வீடியோவை நீக்கிய இர்ஃபான் மருத்துவ குழுவிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இர்ஃபான் மன்னிப்பு கேட்டாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவக் குழுவினர் கூறியிருப்பது இர்ஃபானை மேலும், அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் உங்களுக்காக...