2018 ல இருந்தே ஐபிஎல் ஃபைனலில் ரிப்பீட் ஆகி வரும் ஒரே விஷயம்.. கொல்கத்தாவுக்கு அடிக்க போகும் அதிர்ஷ்டம்..

Published:

ஐபிஎல் தொடரின் 70 லீக் போட்டிகளும் மிக விறுவிறுப்பாக நடந்து முடிந்திருந்தது. இதில் ஒரு சில போட்டிகளின் முடிவால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என எதிர்பார்த்த அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறி அதிர்ச்சி அளித்திருந்தது. இன்னொரு பக்கம் நிச்சயம் பிளே ஆப் சுற்றுக்கு வரமாட்டார்கள் என எதிர்பார்த்த அணிகள் கூட இரண்டாவது பாதியில் பட்டையை கிளப்பி தற்போது முன்னேற்றம் கண்டு பிரம்மிக்க வைத்திருந்தனர்.

கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என முதல் பாதியிலேயே ஓரளவுக்கு தெரிந்திருந்த நிலையில் இவர்களை தாண்டி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகளும் இவர்களுடன் முன்னேறி இருந்தது. இதில் ஆர்சிபி முதல் 8 போட்டியில் ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டிருந்த நிலையில் தொடர்ச்சியாக ஆறு போட்டிகளில் நாக் அவுட் போல ஆடி தற்போது பலமடைந்த அணிகளுக்கு சவால் விட்டு வருகின்றனர்.

இதனிடையே குவாலிஃபயர் 1 போட்டி சமீபத்தில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்றிருந்தது. இதில் ஹைதராபாத் அணியும் மிக பரிதாபமாக தோல்வியடைந்து தற்போது எலிமினேட்டர் 2 போட்டிக்காகவும் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது. தொடர்ந்து நடைபெறும் ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான எலிமினேட்டர் போட்டியில் தோல்வி பெறும் அணி வெளியேறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு 2023 ஆம் ஆண்டு வரை ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் நடந்து வரும் ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி தான் தற்போது பார்க்க போகிறோம். அதாவது 2018 ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை குவாலிஃபயர் 1 போட்டியில் வெற்றி பெறும் அணி தான் கோப்பையை கைப்பற்றி வந்துள்ளது.

2018 ஆம் ஆண்டு சிஎஸ்கேவும், 19 மற்றும் 20 ஆகிய ஆண்டுகளில் குவாலிஃபயர் 1 போட்டியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியும் கோப்பையை கைப்பற்றி இருந்தது. இதே போல, கடந்த ஆண்டு கூட சிஎஸ்கே அணி தான் குவாலிஃபயர் 1 மற்றும் இறுதி போட்டியிலும் வென்றிருந்தது.

இப்படி 6 ஆண்டுகளாக ஒரே விஷயம் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இந்த சீசனிலும் குவாலிஃபயர் 1 போட்டியில் வென்ற கொல்கத்தா அணிதான் ஐபிஎல் கோப்பையை மூன்றாவது முறையாக கைப்பற்றும் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

மேலும் உங்களுக்காக...