இந்தியன் 3 படத்தின் கதை…! வேகம் தான்… ஆனா விவேகமாக இருக்குமா?

Published:

இந்தியன் படம் கமல், இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் 96ல் வெளியாகி வெற்றி நடை போட்டது. இந்தப் படத்தின் அமோக வெற்றி அதன்பிறகு 28 ஆண்டுகள் கழிந்த பின்னும் அடுத்த பாகத்தை எடுக்கும் ஆவலைத் தூண்டியுள்ளது.

இந்தியன் 2 படமும் நீண்ட காலமாகத் தயாரிப்பில் இருந்து வெளியாகி உள்ளது. இதற்குக் கிட்டத்தட்ட 6 ஆண்டுகாலம் ஆகிவிட்டது. படத்திற்குக் கலவையான விமர்சனங்கள். படம் பிளாப் என நெகடிவ் விமர்சனங்களே அதிகம்.

படத்தின் திரைக்கதையில் ஏற்பட்ட தொய்வும், இசையும் தான் காரணமாக சொல்லப்படுகிறது. ஊழலுக்கு எதிரான இந்தப் படம் அன்றைய காலகட்டத்திற்கு சரியாகப் பொருந்தியது. ஆனால் இப்போது கமலின் அரசியல் நிலைப்பாட்டுக்கும், படம் எடுக்கப்பட்ட விதத்திற்கும் கொஞ்சமும் பொருந்தவில்லை என்பது படத்தின் தோல்விக்குக் காரணமாகப் பேசப்படுகிறது.

இந்தியன் 2 எடுக்கும்போதே 3ம் பாகமும் தயாராகி விட்டது. இப்போது பார்க்கப் போனால் 3ம் பாகத்தில் தான் கதை விறுவிறுப்பாக செல்கிறது.

இந்தப் படத்தில் தான் எஸ்.ஜே.சூர்யா, கமல் மோதல் பட்டையைக் கிளப்பும். அதே போல் கமல், காஜலின் மோதலும் சுவாரசியமாக இருக்கும் எனத் தெரிகிறது. இன்னும் 6 மாதங்களில் இந்தப் படமும் ரிலீஸாகி விடும் என்றும் தெரிகிறது. படத்தின் கதை என்னன்னு பார்க்கலாமா…

இந்தியன் 3 படத்தின் கதை ரொம்ப வலுவானது. இதுல கமல் டபுள் ஆக்ட் ரோல். இளைஞராகவும், வயதானவராகவும் நடிக்கிறார். சேனாபதியோட அப்பா வீரசேகரன். அவரைப் படத்தில் இளமையாகக் காட்டுகிறார்கள். அவருக்கு ஜோடி காஜல் அகர்வால். அப்படின்னா பாடல் இருக்கும். கிளுகிளுப்பு இருக்கும். ஆக்ஷன் இருக்கும். இந்தக் கதை நடக்கிற காலம் 1806.

பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் இருந்த நாள். அதை எதிர்த்து வீரசேகரன் போராடுகிறார். அப்போது ஏற்படும் சண்டைச் சச்சரவுகள், மோதல்கள், இவர்கள் போடும் திட்டங்கள் என எல்லாம் இந்தப் படத்தில் விரிவாக சொல்லப் போகிறார்களாம்.

இந்தப் படத்தில் தான் டீஏஜிங் யுக்தியில் கமலை ரொம்ப இளமையாகக் காட்டி இருக்கிறார்களாம். அந்தக் கால சுதந்திரப் போராட்டக் காலத்தில் எடுக்கப்பட்ட கதை என்பதால் லிப் லாக் எல்லாம் இருக்காதாம். ஆனால் வீரசேகரன், காஜல் அகர்வால் தம்பதியின் மகன் தான் சேனாபதி.

Indian 3
Indian 3

இதை எப்படி சொல்லப் போகிறார்கள் என்பதில் தான் சஸ்பென்ஸே இருக்கிறதாம். அப்படின்னா படத்தை உடனே ரிலீஸ் பண்ணுங்கன்னு சொல்றீங்களா? கொஞ்சம் பொறுங்க. இப்ப தானே இந்தியன் 2 பார்த்துருக்கீங்க. சூடா இருப்பீங்க. சூடு ஆறட்டுமே.

 

மேலும் உங்களுக்காக...