இந்தியன் 2 படத்தின் டிரைலர் அப்டேட்… வெளிநாடுகளில் மிரட்டிய கமல்!

1996ல் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படம் பட்டி தொட்டி எங்கும் சக்கை போடு போட்டது. அந்தப் படத்தில் ஏ.ஆர்.ரகுமான் பிரமாதமாக இசை அமைத்து இருந்தார். பாடல்கள் எல்லாமே சூப்பர்ஹிட். அதே போல பிஜிஎம்மிலும் மிரட்டியிருப்பார்.…

I2

1996ல் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படம் பட்டி தொட்டி எங்கும் சக்கை போடு போட்டது. அந்தப் படத்தில் ஏ.ஆர்.ரகுமான் பிரமாதமாக இசை அமைத்து இருந்தார். பாடல்கள் எல்லாமே சூப்பர்ஹிட். அதே போல பிஜிஎம்மிலும் மிரட்டியிருப்பார்.

ஆனால் அதன் தொடர்ச்சியாக வரும் இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். பாடல்களில் தாத்தா வர்றாரே பாடலைத் தவிர மற்றவை பெருமளவில் வரவேற்பைப் பெறவில்லை. ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஏ.ஆர்.ரகுமான் மியூசிக் போல இல்லையே என ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர். பிஜிஎம்மிலும் மிரட்டல் இல்லை. ஆனால் ஒரு சிலர் படத்தைப் பார்த்தால் தான் தெரியும். இவர் தான் 2கே கிட்ஸ்சுக்குப் பொருத்தமானவர். அவருக்குத் தான் இப்ப உள்ள டிரண்ட் பற்றி தெரியும்.

அதனால் தான் ஷங்கரே அவரைப் போட்டுள்ளார் என்று சமாளித்து வருகின்றனர். நீண்ட காலம் தயாரிப்பில் இருந்த படம் ஜூலை 12ல் திரைக்கு வர உள்ளதால் இப்போது இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் களைகட்டியுள்ளன. ரசிகர்களுக்கு ஷங்கர் மேல் மிகுந்த நம்பிக்கை உள்ளது.

தொழில்நுட்பத்தைக் கையாள்வதில் அவருக்கு நிகர் அவர் தான். அது தவிர கிராபிக்ஸிலும் வழக்கம் போல மிரட்டியிருப்பார் என்கின்றனர். அதனால் அவரையும், கமலையும் நம்பி படத்திற்குப் போகலாம் என்று பேசி வருகின்றனர்.

இந்தியன் 2 படத்தின் பிரஸ்மீட் 25ம் தேதி டிரைலரோடு நடக்க உள்ளதாம். வெளிநாடுகளில் எல்லாம் இந்தியன் 2 ரொம்ப பிக்கப் ஆனதால் அதிகமான திரையரங்குகள் ஒதுக்கி உள்ளார்களாம். அங்கு ரொம்ப ஆர்வத்துடன் டிக்கெட் எல்லாம் விற்பனை ஆகிக் கொண்டு உள்ளதாம்.

கல்கி 2898 AD படத்துக்கும் பிரம்மாண்டமான வரவேற்புடன் முன்பதிவு நடந்து கொண்டுள்ளதாம். படத்தின் டிரைலரும் கமலின் வேடம் ரொம்பவே மிரட்டியுள்ளதாம். ஆந்திராவில் வைஜெயந்தி மூவீஸ் இந்தப் படத்தின் நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் என்று திட்டம் போட்டார்களாம்.

Indian 2
Indian 2

ஆனால் என்ன காரணத்தாலோ நடத்தவில்லை. மும்பையில் நடத்திய நிகழ்ச்சியே போதும். உலகளவில் வரவேற்பைப் பெற்றுவிட்டது என்று இருந்து விட்டார்கள்.

இந்தியன் 2 ஜூலை 12ல் வெளியாவதால் அதற்கான முன்னேற்பாடுகள் அமர்க்களமாக நடந்து வருகிறதாம். கல்கி படத்தின் ரிலீசுக்கும், இந்தியன் 2 படத்தின் ரிலீசுக்கும் சரியான இடைவெளி விடப்பட்டுள்ளது. இந்தியன் 2 படத்திற்கு பெரும் வரவேற்பு உள்ளது வெளிநாடுகளில் நடக்கும் டிக்கெட் முன்பதிவிலும், அதிகமான தியேட்டர்களில் வெளியிடுவதையும் வைத்தே கண்டுகொள்ளலாம்.

தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் பிறந்தநாளுக்கு மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் கமல் வாழ்த்து சொல்லி இருக்கிறார். இது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.