இளையராஜாவிடமிருந்து வராத அழைப்பு.. திரைக்கதை மன்னன் இசையமைப்பாளராக மாறியது இப்படித்தான்..

Published:

தமிழ் சினிமாதுறையின் திரைக்கதை மன்னன் என்று சினிமா ரசிகர்களால் புகழப்படுவர்தான் இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ். தனது குருவான பாரதிராஜாவிடம் சினிமாவைக் கற்றுக் கொண்டு எந்த சாயலும் இல்லாமல் தமிழ் சினிமாவிற்கு தனது ஸ்டைலில் ஹீரோயிசம் இல்லாத புது வெரைட்டியான படங்களைக் கொடுத்து ஹிட் ஆக்கியவர்.

இயக்குநர் பாரதிராஜா தனது புதிய வார்ப்புகள் படத்திற்காக புதுமுகத்தை ஹீரோவாகத் தேடிக் கொண்டிருந்த வேளையில் தனது மாணவன் பாக்யராஜையே இந்தப் படத்தில் நடிக்கச் சொல்லி ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு பாக்யராஜ் பாரதிராஜாவிடம் இருந்து தனியாக வந்து சுவரில்லா சித்திரங்கள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படமே 100 நாட்களைக் கடந்து ஓட தனது ஆசானைப் போலவே முன்னனி இயக்குநர்களில் ஒருவரானார் பாக்யராஜ். தொடர்ந்து முந்தாணை முடிச்சு, சின்ன வீடு, ஒரு கை ஓசை, மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா, தாவணிக் கனவுகள், அந்த 7 நாட்கள், தூறல் நின்னுபோச்சு, போன்ற பல வெற்றிப் படங்களைக் கொடுத்தார்.

இவரின் பெரும்பாலான படங்களுக்கு இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா. இந்நிலையில் தனது அடுத்த படமான இது நம்ம ஆளு படத்திற்காக இளையராஜாவினைச் சந்திக்க அவரது ஸ்டுடியோ சென்றிருக்கிறார் பாக்யராஜ். அங்கு அவரைச் சந்திக்க முடியவில்லை. ஏனென்று கேட்க, அவரின் உதவியாளர் உங்களை இளையராஜா வீட்டில் வந்து சந்திக்கச் சொன்னார் என்று கூறியுள்ளார். வழக்கமாக அவரது ஸ்டுடியோவிலேயே சந்திக்கும் பாக்யராஜூக்கு இது புதிதாகத் தோன்றிற்று. பாக்யராஜும் அவரை வீட்டில் சென்று சந்திக்கவில்லை.

ஷோலே பாடல் மூலத்தை வைத்து உருவாகிய முக்காலா பாடல்.. பாடகர் மனோவின் திறமையை உலகமே அறியச் செய்த ஏ.ஆர்.ரஹ்மான்

பின் மீண்டும் இளையராஜாவிடம் இருந்து அழைப்பு வரும் என்று சில நாட்கள் காத்திருந்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அந்த தருணத்தில்தான் அவருக்கு இசையைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் பிறக்க சுதாகர் மாஸ்டர் என்பவரிடம் சங்கீதம் பயின்றிருக்கிறார்.

இவர் சங்கீதம் பயிலும்  போதே இவருக்கு பல டியூன்கள் சிந்தனையில் வர மாஸ்டர் இவரிடம் நீங்கள் இசையைக் கற்றுக் கொள்ள வேண்டாம். டியூனைப் போடுங்கள் நாங்கள் இசையமைத்துக் கொள்கிறோம் என்று கூற முதன் முதலாக இது நம்ம ஆளு படத்தின் மூலம் இசையமைப்பாளராக அவதாரம் எடுத்தார். இப்படத்தின் பாடல்கள் ஹிட் ஆகவே திரைக்கதை மன்னன், இசையிலும் கவனிக்க வைத்தார்.

தொடர்ந்து ஆராரோ ஆரிராரோ படத்திற்கும் இசையமைத்தார். பின்னர் மீண்டும் இளையராஜாவுடன் இணைந்து சில படங்களில் பணிபுரிந்தார். சொக்கத்தங்கம் படத்தில் தேவாவுடன் இணைந்து கேப்டனுக்காக சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்தார் பாக்யராஜ்.

மேலும் உங்களுக்காக...