எம்.ஆர்.ராதாவின் மகள் என்று தெரியாமலேயே ராதிகாவை ஹீரோயின் ஆக்கிய பாரதிராஜா..

Published:

இயக்குநர் இமயம் பாரதிராஜா தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்களையும், தொழில்நுட்பக் கலைஞர்களையும் அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும் பல நடிகர்கள் வேறு படங்களில் அறிமுகமாகயிருந்தாலும் அவர்களையும் தன்படத்தில் வித்யாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வைத்து அவர்களுக்கு சினிமாவில் நிரந்தர இடம் கிடைக்கச் செய்தவர்.

16 வயதினிலே படத்தில் ஸ்ரீதேவி தொடங்கி  இவர் அறிமுகப்படுத்தி வைத்த நடிகைகளும் ஏராளம். பெரும்பாலும் தன்படத்தில் புதுமுகமாக அறிமுகமாகும் ஹீரோயின்களுக்கு R வரிசையில் பெயர் வைத்து அவர்களை சினிமாவில் நிலைக்கச் செய்தவர். ராதிகா, ரேவதி, ராதா, ரஞ்சிதா, ரேகா போன்ற பல கதாநாயகிகளை அறிமுகப்படுத்தி அவர்களை திரையில் சாதிக்க வைத்த பெருமைக் குரியவர்.

இவர் ராதிகாவை சினிமாவில் அறிமுகம் செய்தது எப்படித் தெரியுமா? கிழக்கே போகும் ரயில் படத்திற்காக மேட்டுப்பாளையத்தில் ஷூட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டு படக்குழுவினர் 78 பேருடன் அங்கே தங்கியிருந்தார்கள். அப்போது பிரபல நாயகியின் தங்கைதான் இப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமாக வேண்டியிருந்தது. ஷுட்டிங்கிற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயாரான நிலையில் அன்று அந்த புதுமுகம் வரவில்லை. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியாகினர்.

இளையராஜாவிடமிருந்து வராத அழைப்பு.. திரைக்கதை மன்னன் இசையமைப்பாளராக மாறியது இப்படித்தான்..

உடனே பாரதிராஜா மீண்டும் சென்னை வந்து எப்படியாவது ஹீரோயினை பிடிக்க வேண்டும்  என்று தேடிக் கொண்டிருந்த போது ஒரு நடன இயக்குநரிடம் அவர் தங்கைக்காக எடுக்கப்பட்ட ஆல்பத்தில் இருந்த ராதிகாவின் புகைப்படத்தினைப் பார்த்திருக்கிறார்.

இவர்யார் என்று விசாரிக்க இவர் சிலோன் பக்கமிருந்து இங்கு வந்து தங்கியிருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். உடனே அவர்கள் வீட்டிற்குச் சென்ற பாரதிராஜாவினை ராதிகாவின் தாய் அடையாளம் கண்டு கொண்டார். ஆனால் ராதிகாவுக்குத் தெரியவில்லை. உடனே அவர் தாவணியில் வருமாறு கூற என்னவென்று தெரியாது திருதிருவென விழித்த ராதிகாவிற்கு அருகில் இருந்த தன் நண்பரிடம் துண்டை வாங்கி அதை தாவணி போல் மேல போட்டு பார்த்திருக்கிறார்.

மேலும் புலியூர் சரோஜாவை வைத்து நடன அசைவுகளையும், சினிமா நளினங்களையும் சோதித்துப் பார்த்த பாரதிராஜாவுக்கு முகத்தில் சந்தோஷம். தான் தேடியவாறே ஹீரோயின் கிடைத்து விட்டார் என்று. அதன்பின் தான் இவர் எம்.ஆர்.ராதாவின் மகள் என்று தெரிந்திருக்கிறது. உடனே அவர் அம்மாவிடம் அனுமதி பெற்று ஷூட்டிங் தளத்திற்கு அழைத்துச் செல்ல பாக்யராஜ் உள்ளிட்ட இணை இயக்குர்கள் அதிர்ந்து போயிருக்கின்றனர்.

இவர் எப்படி செட் ஆவார் என்று 10 நாட்கள் ஷுட்டிங் சென்ற நிலையில் அனைவரும் வியக்கும்படி நடிப்பில் அசத்தி அதன்பின் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவையே கலக்கினார் ராதிகா.

மேலும் உங்களுக்காக...