ராஜாதி ராஜா படத்துக்குப் பின்னால இப்படி ஒரு சீக்ரெட்டா? ரஜினியை இயக்கும் வாய்ப்பை நழுவ விட்ட இளையராஜா

Published:

இசைஞானி இளையராஜா இசையமைப்பது மட்டுமின்றி பல பாடல்களை எழுதியும், பாடியும் இருக்கிறார் என்பது நமக்குத் தெரியும். ஆனால் ஒரு படத்தினை இயக்கும் வாய்ப்பு வந்து பின்னாளில் அது நடக்காமல் போனதென்றால் வியப்பாக இருக்கிறதா? அதுவும் சூப்பர் ஸ்டார் ரஜினி படம். அந்தப் படம் தான் ராஜாதி ராஜா. அப்போது இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் மோகன் மற்றும் விஜயகாந்தை வைத்து வரிசையாக வெற்றிப் படங்களைக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

இதனிடையே இளையராஜாவின் அண்ணன் ஆர்.டி. பாஸ்கர் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ரஜினியை ஹீரோவாக வைத்து படம் இயக்குவதாக இருந்தது. அதன்படி ஆர்.டி.பாஸ்கர் ரஜினியிடம் கால்ஷீட் வாங்கி விட்டார். இந்நிலையில் கதை என்ன? யார் இயக்குநர் என்பதெல்லாம் சஸ்பென்ஸாக இருந்தது.

இதனிடையே ரஜினியைச் சந்தித்த இளையராஜா இந்தப் படத்தினைத் தான் இயக்கப் போவதாகக் கூறியிருக்கிறார். படத்தின் பெயர் ராஜாதி ராஜா என்று கூற ரஜினி அதென்ன ராஜாதி ராஜா என்று கேட்க, எனது பெயர் ராஜா. திரையுலகில் நீங்கள் சூப்பர் ஸ்டார். எனவே எனக்கும் மேலே நீங்கள் இருப்பதால் இரண்டையும் சேர்த்து ராஜாதி ராஜா என வைத்துள்ளேன் என விளக்கம் கொடுத்திருக்கிறார்.

அதிரடி இசை இல்லை.. பஞ்ச் வசனம் இல்லை.. பாடல்கள் இல்லை.. வெளியான கொட்டுக்காளி டிரைலர்

இதனையடுத்து இளையராஜா இந்தப் படத்தினை இயக்குவதாக இருந்தது. அதன்பின் ஆர். சுந்தர்ராஜனை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். ஆனால் ஆர்.சுந்தர்ராஜன் மேல் சற்று நம்பிக்கை இல்லாத ரஜினி முதலில் சில நாட்கள் நடித்து விட்டு கதையை செல்லும் பாதையை வைத்து இது தனக்குச் செட் ஆகாது என்று கூறியிருக்கிறார்.

ஆனால் இளையராஜா ஆர்.சுந்தர்ராஜன் மேல் நம்பிக்கை வையுங்கள். இசையை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று ரஜினிக்கு நம்பிக்கை அளித்து அந்தப் படத்தில் நடிக்க வைத்திருக்கிறார். மிகவும் குறுகிய நாட்களில் தயாரான ராஜாதி ராஜா 175 நாட்களுக்கு மேல் சாதனை படைத்தது. இளையராஜா இசையில் அத்தனை பாடல்களும் சூப்பர்ஹிட் ஆனது. மேலும் நதியா,ராதா ஜோடியும் ரசிகர்களுக்குப் புது விருந்தாக அமைந்தது. இரட்டை வேடத்தில் ரஜினி இதில் அசத்தியிருப்பார்.

மேலும் உங்களுக்காக...