Good Bad Ugly படகுழுவினருக்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ்… இது எதிர்பாரா ட்விஸ்ட் தான்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் அஜித்குமார். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் இன்று தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் இவருக்கு கார் ரேசிங்கில் தான் அதிக…

ilaiyaraja

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் அஜித்குமார். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் இன்று தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் இவருக்கு கார் ரேசிங்கில் தான் அதிக ஆர்வம் இருந்திருக்கிறது. தனது 18 வது வயதில் கார் ரேசிங்கில் கலந்து கொண்டார் அஜித்குமார். அந்த நேரத்தில் மாடலிங்கும் செய்து வந்தார். அதன் மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

1990களில் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான அஜித் குமார் காதல் மன்னன் வாலி போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வலம் வந்தார். 2000 காலகட்டத்திற்கு பிறகு பல கமர்சியல் வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக ஆனார் அஜித்குமார்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித்குமார் நடித்த விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறி பிப்ரவரி ஆறாம் தேதி ரிலீசானது. இந்த படம் தள்ளிப் போனதால் எல்லா திரைப்படங்களின் ரிலீஸும் குழப்பத்திற்கு உள்ளானது. அதே போல் இவர் நடித்த Good Bad Ugly திரைப்படம் கடந்த வியாழக்கிழமை வெளியானது. ரசிகர்கள் இந்த படத்திற்கு நல்ல விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் Good Bad Ugly படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் அஜித்குமார் மீண்டும் இணைந்து படம் பண்ண போகிறார் என்ற தகவல் வெளியானது.

இந்நிலையில் Good Bad Ugly திரைப்படத்தில் பழைய விண்டேஜ் பாடல்களை இயக்குனர் பயன்படுத்தியிருப்பார். அதில் இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் ஆன ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்ச குருவி, இளமை இதோ இதோ போன்ற பாடல்களை பயன்படுத்தி இருப்பார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இசைஞானி இளையராஜா Good Bad Ugly பட குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். உடனடியாக அந்த பாடல்களை நீக்க வேண்டும் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையேல் ஐந்து கோடி நஷ்ட ஈடு தரவேண்டும் என்று கூறி நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார் இசைஞானி இளையராஜா. இது எதிர்பாராத ஒரு டெஸ்ட் ஆக மாறி இருக்கிறது.