நான் இந்த மாதிரி ஆகும் போது அரசியலில் குதிப்பேன்… பார்த்திபன் பேச்சு…

Published:

இராதாகிருஷ்ணன் பார்த்திபன் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகங்களைக் கொண்டவர். 1984 ஆம் ஆண்டு கே. பாக்கியராஜ் அவர்களிடம் உதவி இயக்குனராக சேர்ந்து தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தவர்.

கே. பாக்யராஜ் அவர்களுடன் உதவி இயக்குனராக 20 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளர். பார்த்திபன் அவர்கள் 15 படங்களை இயக்கியும் 13 படங்களை தயாரித்தும் 70 படங்களுக்கு மேல் நடித்தும் உள்ளார். இவர் அழுத்தம் திருத்தமாக வசனங்களை பேசும் விதத்திற்காக ரசிகர்களை பெற்றவர்.

1984 ஆம் ஆண்டு ‘தாவணி கனவுகள்’ திரைப்படத்தில் தபால்காரராக நடித்து அறிமுகமானார். 1989 ஆம் ஆண்டு ‘புதிய பாதை’ திரைப்படத்தின் வாயிலாக இயக்குனராக அறிமுகமானார். இப்படம் நல்ல விமர்சங்களைப் பெற்று வசூல் சாதனை படைத்தது, அதே சமயம் தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது , சிறந்த திரைப்படத்திற்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது மற்றும் தமிழ்நாடு மாநில விருது உட்பட பல பாராட்டுகளை வென்றது. சிறந்த கதை எழுத்தாளருக்கான திரைப்பட விருதையும் இத்திரைப்படம் வென்றது.

‘நீ வருவாய் என’, ‘உன்னருகே நான் இருந்தால்’, ‘வெற்றிக் கொடி கட்டு’, ‘அழகி’, ‘குண்டக்க மண்டக்க’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘பொதுவாக என் மனசு தங்கம்’, ‘இரவின் நிழல்’, ‘பொன்னியின் செல்வன்’ போன்ற திரைப்படங்கள் இவர் நடித்ததில் பிரபலமானவை ஆகும். நக்கலாக பேசுவதிலும் பதில் சொல்வதிலும் வல்லவர் பார்த்திபன் அவர்கள்.

இந்நிலையில், தற்போது நடிகர் விஜய் அவர்கள் அரசியலில் இறங்கியுள்ளார், நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதா என்ற ரசிகரின் கேள்விக்கு, ‘நான் என்றைக்கு விஜய் அவர்கள் போல் 250 கோடி சம்பளம் வாங்குகிறேனோ அன்றைக்கு அரசியலில் குதிப்பேன்’ என்று தனக்கு வழக்கமான நக்கலான பாணியில் பதிலளித்துள்ளார் பார்த்திபன்.

மேலும் உங்களுக்காக...