‘குட் பேட் அக்லி’ இந்த நடிகருக்கு சொல்லப்பட்ட கதையா? அட பாவமே.. தேறுதானு தெரியலயே

Published:

அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி . இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்றுதான் ரிலீஸ் ஆனது. அதில் இதுவரை இல்லாத அளவுக்கு அஜித் இந்த படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் போஸ் கொடுத்து ரசிகர்களை மிகவும் கவர்ந்திருக்கிறார். அதுவும் அவருக்ககே இல்லாத பாணியில் ஒரு புதுமையான கெட்டப்பில் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார் என்றே தெரிகிறது.

கை முழுவதும் டாட்டூவுடன் கை செயின் கழுத்தில் செயின் என ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக இந்த படம் அமைய இருக்கிறது என இந்த படத்தின் போஸ்டரை பார்த்தாலே தெரிகிறது. அது மட்டுமல்லாமல் இந்த படத்தை பற்றிய அப்டேட்டுகள் ஒவ்வொன்றாக இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் சிம்ரன் நடிக்கவும் வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

படத்திற்கு இசை தேவி ஸ்ரீ பிரசாத். அது மட்டுமல்லாமல் மூன்று வேடங்களில் அஜித் இந்த படத்தில் நடிப்பார் என்றும் தெரிகிறது. இந்த நிலையில் குட் பேட் அக்லியின் கதை முதலில் விஷாலுக்கு சொல்லப்பட்டதாகவும் அதில் விஷால் மார்க் ஆண்டனி கதையை தேர்ந்தெடுத்து நடித்ததால் இந்த குட் பேட் அக்லி கதை அஜித்திற்கு வந்துள்ளதாகவும் ஒரு தகவல் வைரலாகி வருகின்றது.

மேலும் ஆதிக் அஜித்தின் தீவிர ரசிகராக இருப்பதால் அஜித்தை வைத்து ஒரு மாஸான திரைப்படத்தை ரசிகர்களுக்கு கொடுக்கவேண்டும் என்ற முனைப்பில் மிகத் தீவிரமாக இருக்கிறார். ஆனால் விஷாலுக்காக சொல்லப்பட்ட கதை என்பதால் அஜித்துக்கு எந்த அளவு வொர்க் அவுட் ஆகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் உங்களுக்காக...