இவருக்கு மட்டும் தங்கச்சியா நடிக்க மாட்டேன்.. அடம்பிடிக்கும் கீர்த்தி சுரேஷ்..அந்த நடிகர் யார் தெரியுமா?

Published:

தமிழ் சினிமாவில் இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கிய இது என்ன மாயம் திரைப்படம் மூலம் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக ஹீரோயினாக அறிமுகமானவர்தான் நடிகை கீர்த்தி சுரேஷ். சினிமா குடும்பத்தில் இருந்து வந்த கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் வெளியான ரஜினி முருகன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைய முன்னணி நடிகைகளில் ஒருவராக உருவெடுத்தார் கீர்த்தி சுரேஷ்.

தொடர்ந்து விஜய், விக்ரம், சூர்யா என முன்னனி நடிகர்களுடன் ஒரு ரவுண்டு வந்தார். மேலும் தெலுங்கு, கன்னட சினிமாவிலும் கால் பதித்து அங்கும் ஜொலித்து வருகிறார். மகாநடி திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதினையும் பெற்றார். மேலும் உச்சபட்சமாக சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் அவருக்குத் தங்கையாக நடித்து கவனம் ஈர்த்தார்.

நடிப்புன்னா எப்படி இருக்கணும் தெரியுமா? தேசிய விருது பெற்ற நித்யாமேனன் பளீச்

தற்போது இவர் நடிப்பில் ரகுதாத்தா திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடி வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் முன்னனி ஹீரோக்களுடன் டூயட் ஆடிய கீர்த்தி சுரேஷ் இன்னும் அஜீத்துடன் ஜோடி சேரவில்லை.

சமீபத்தில் அஜீத்துக்கு தங்கை வேடம் வந்தால் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு கீர்த்தி சுரேஷ் பளீச் பதில் அளித்துள்ளார். அதில் அஜீத்துடன் நடிக்க எனக்கு அதீத விருப்பம் உள்ளது. ஆனால் தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன். அவருடன் நடித்தால் ஜோடியாக மட்டுமே நடிப்பேன் என கூறியிருக்கிறார். வேதாளம் படத்தில் அஜீத்துக்கு தங்கையா லட்சுமி மேனன் நடித்து படம் முழுக்க கவனம் ஈர்த்தார். ஸ்ருதி கதபாத்திரத்தைக் காட்டிலும், லட்சுமி மேனன் கதாபாத்திரம் வலுவாக இருக்கும்.

அதேபோல் அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நயன்தாரா ஜோடியாக இருந்தாலும் தங்கையாக நடித்த கீர்த்தி சுரேஷ்-க்கு முக்கியத்துவம் இருக்கும். இந்நிலையில் அஜீத்துடன் நடித்தால் ஹீரோயின்தான் என்று தடாலடியாக அறிவித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். கீர்த்தி சுரேஷின் தாயார் மேனாக நெற்றிக் கண் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...