லியோ படத்தின் ஒரு சண்டை காட்சிக்கு இவ்வளவு கோடியா… செலவு தெரியுமா?

Published:

நடிகர் விஜய் நடிப்பில் லலித்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தின் ஒரு சண்டைக் காட்சி vfx வேலைகளுக்கு மட்டும் பத்து கோடி ரூபாய் செலவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் முதல் பாடலும் விஜய்யின் பிறந்தநாள் பரிசாக வெளிவந்தது. போஸ்டரும் பாடலும் ஒரே நாளில் வெளிவந்துள்ளதால் ரசிகர்கள் இரட்டை மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த பாடலை அனிருத் இசையில் விஜய் பாடியுள்ளார்.

பாடல் வெளியான சில நிமிடத்தில் 10 இலட்சத்திற்கு அதிகமானோர் இந்த பாடலை பார்த்து சாதனை படைத்துள்ளனர். இந்த பாடலின் வரிகள் விஜய்யின் அரசியல் வருகையை குறிப்பதாக ஒரு சிலர் கூறி வருகின்றனர். மேலும் சிலர் இந்த படம் LCU படம் தான் என கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இப்படி இந்திய அளவில் பெரிதும் எதிர்பார்ப்பு உள்ள இந்த திரைப்படம், திரிஷா, பாலிவுட் பிரபலம் சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சாண்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

இந்நிலையில் படத்தின் அப்டேட் அவ்வப்போது வந்த வண்ணம் உள்ளது. தற்போழுது இப்படத்தில் இடம் பெறும் ஒரு சண்டை காட்சிக்காக பத்து கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களுடைய எதிர்பார்ப்பை மீண்டும் தூண்டி உள்ளது.

கமலின் 2 படங்கள் ஒரே நாளில் ரிலீசா? கமலுக்கு போட்டி கமல் தான்….

லியோ படத்தின் VFX ஆக மட்டுமே இத்தகைய தொகை செலவு செய்துள்ளதாக கூறப்படுவது ரசிகர்கள் இடையை பெறும் எதிர்பார்பை கிளப்பியுள்ளது.

மேலும் உங்களுக்காக...