கமலின் 2 படங்கள் ஒரே நாளில் ரிலீசா? கமலுக்கு போட்டி கமல் தான்….

உலக நாயகன் கமலஹாசன் நடித்துள்ள இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விக்ரம் படத்தின் வெற்றிக்கு பின்னர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது.

லைக்கா நிறுவனமும் ,ரெட் ஜெயிண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா எனும் மிகப்பெரிய நட்சத்திரபட்டாலமே நடித்து வருகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

தற்போது இறுதிகட்டத்தை நெருங்கியுள்ள இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்புகள் சென்னை விமான நிலையத்தில் நடைபெற்ற வருகிறது. அங்கு கமல்ஹாசன் நடிக்கும் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் இந்தியன் 2 ஷூட்டிங் முழுவதுமாக நிறைவடைந்து விடும் என கூறப்படும் நிலையில் இப்படத்தை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்திற்கு போட்டியாக கமல்ஹாசன் நடித்துள்ள மற்றும் ஒரு பிரம்மாண்ட திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபாஸ் நடிப்பில் மிகப்பெரிய பட்சத்தில் உருவாக்கி வரும் ப்ரொஜெக்ட் கே படத்தில் நடிகர் கமல்ஹாசன் வில்லன் நடிக்க உள்ளார்.

அந்த படமும் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டதால், இது இந்தியன் 2 படத்துடன் மோதுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

விஜய்க்காக அஜித் படத்தில் இருந்து பாடலை காப்பியடித்த அனிருத்! அதிர்ச்சி அப்டேட்!

மேலும் இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடித்து வருகிறார். மேலும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.

ஒரே நாளில் கமலின் இரண்டு படங்கள் போட்டி போடுவது ரசிகர்கள் மத்தில் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...