பள்ளி குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ்-இல் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன தெரியுமா?

Published:

கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கூடம் திறந்து விட்டதால் குழந்தைகளுக்கு தினமும் என்ன லஞ்ச் கொடுத்து அனுப்புவது என பெற்றோர் குழப்பம் கொள்வதை காணமுடிகிறது.

எக்காரணம் கொண்டு குழந்தைகளின் லஞ்சுக்கு பேக் செய்யக்கூடாத உணவு வகைகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

*இரண்டு நிமிடங்களில் செய்ய முடிகிறது என்பதற்காக இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் செய்து குழந்தைகளுக்கு கொடுத்து அனுப்ப கூடாது.

*மைதா மற்றும் வெற்று கலோரிகளைக் கொண்ட நூடுல்ஸ் தேவையான சத்துக்கள் எதையும் தராமல் குடல் ஆரோக்கியத்தையும் கெடுக்கும்.

*இரவு மீதியான உணவுப் பொருட்களை குழந்தைகளுக்கு கொடுத்து அனுப்புவது தவறான அணுகுமுறையாகும்.

*வெயில் அதிகமாகி உணவு கெட்டுப் போனால் அதை சாப்பிடும் குழந்தைகளுக்கு ஃபுட் பாய்சனிங் ஆக வாய்ப்புகள் அதிகம்.

*எண்ணெயில் பொறித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.

*பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் அதிக அளவில் சோடியம் மற்றும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பிற செயற்கைப் பொருள் இருப்பதால் அவற்றை தவிர்க்க வேண்டும்.

*சிப்ஸ் ,பிஸ்கட் போன்ற உணவுப் பொருட்களை வாங்கி மதிய உணவுக்கு பதிலாக கொடுத்து அனுப்புவது மிகவும் கேடு விளைவிக்க கூடிய செயல் ஆகும். இதுபோன்ற உணவுகளில் இருக்கும் அதிக கொழுப்பு, உப்பு மற்றும் சர்க்கரை சிறுவயதிலேயே உடல் பருமன் மற்றும் பல உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும்.

*மேலும் மயோனைஸ் சில மணி நேரங்களில் கெட்டு விடும் என்பதால் குழந்தைகளுக்கு மயோனைஸ் கொடுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

லியோ படத்தின் ஒரு சண்டை காட்சிக்கு எவ்வளவு கோடியா… செலவு தெரியுமா?

*அடுத்ததாக ஜெல்லி, சாக்லேட் போன்ற இனிப்பு வகைகளை தினமும் கொடுப்பதை தவிர்த்து பழங்கள் சாப்பிட பழகுவது ஆரோக்கியமான நடைமுறையாக இருக்கும்.

*காய்கறிகள், முட்டை, இறைச்சி இடம்பெறும் வகையில் புதியதாக தயார் செய்யப்படும் உணவே குழந்தைகளுக்கு ஊக்கமும் வளர்ச்சியும் அளிக்கும் என்பதே உணவு நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

மேலும் உங்களுக்காக...