ஓடிடியில் இந்த வாரம் இந்த 2 படங்களை மிஸ் பண்ணிடாதீங்க!.. ஹாய் நான்னா, காதல் தி கோர் வந்துடுச்சு!

Published:

கடந்த ஆண்டு வெளியான பல நல்ல படங்கள் அடுத்தடுத்து ஒரு மாத இடைவெளியில் ஓடிடியில் அணிவகுத்து வரும் நிலையில், ஜனவரி 4ம் தேதியான இன்று ஓடிடியில் 2 சூப்பரான திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. அந்த படங்களை இந்த வாரம் மிஸ் செய்து விடாதீர்கள்.

இந்த வாரம் தியேட்டரில் பெரிய படங்கள் ஏதும் வெளியாகவில்லை. அடுத்த வாரம் பொங்கலுக்குத் தான் கேப்டன் மில்லர் மற்றும் அயலான் உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன.

இந்த வார ஓடிடி ரிலீஸ்:

இந்நிலையில், இந்த வாரம் ரசிகர்கள் ஓடிடியில் கண்டு ரசிக்க ஹாய் நான்னா மற்றும் காதல் தி கோர் உள்ளிட்ட படங்கள் வெளியாகி உள்ளன.

கடந்த வாரம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் நயன்தாரா நடித்த அன்னபூரணி படம் வெளியாகி நம்பர் ஒன் தென்னிந்திய படம் என்கிற அந்தஸ்த்தை பிடித்து ஓடிக் கொண்டிருக்கிறது.

அதற்கு போட்டியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான ஹரிஷ் கல்யாண், எம்.எஸ். பாஸ்கர், இந்துஜா ரவிச்சந்திரன் நடித்த பார்க்கிங் திரைப்படம் அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்து ஓடிடியில் தரமான சம்பவத்தை செய்து வருகிறது.

இரண்டு சூப்பர் படங்கள்:

இந்நிலையில், இந்த வாரம் இரண்டு பெரிய ஓடிடி நிறுவனங்கள் போட்டி போட்டு புதிய படங்களை ரிலீஸ் செய்துள்ளன. மீண்டும் நெட்பிளிக்ஸ் இந்த வாரமும் வீக்கெண்ட் வாரில் களமிறங்கி காலையிலேயே நானி மற்றும் மிருணாள் தாகூர் நடித்த ஹாய் நான்னா படத்தை வெளியிட்டுள்ளது. தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் டப் செய்யப்பட்ட அந்த தெலுங்கு படம் ரசிகர்களை தியேட்டரில் கவர்ந்ததை போலவே ஓடிடி ரிலீஸிலும் கவர்ந்து சக்கைப் போடு போட்டு வருகிறது.

அதற்கு போட்டியாக இன்று இரவு அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஜோ பேபி இயக்கத்தில் மம்மூட்டி, ஜோதிகா நடித்த காதல் தி கோர் மலையாள திரைப்படம் வெளியாகி உள்ளது. அதன் அறிவிப்பை சற்று முன் மம்மூட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

இந்த இரு படங்களும் தியேட்டரிலேயே நல்ல வசூலையும் வரவேற்பையும் பெற்ற நிலையில், இந்த இரு படங்களையும் பார்க்காத தமிழ் சினிமா ரசிகர்கள் தாராளமாக இந்த வாரம் ஓடிடியில் வெளியாகி உள்ள இந்த இரு படங்களையும் பார்த்து ரசிக்கலாம்.

டாடா படத்தை போலவே கொஞ்சம் ட்விஸ்ட் உடன் உருவாகி உள்ள ஹாய் நான்னா படம் கடைசி கிளைமேக்ஸ் காட்சிகளில் எமோஷனல் கனெக்ட் நல்லாவே வொர்க்கவுட் ஆகியுள்ளது.

ஓரினச்சேரிக்கை கதையை மையமாக வைத்து உருவாகி உள்ள மம்மூட்டி, ஜோதிகா நடித்த காதல் தி கோர் படம் புதிய கதைகளை தேடிப் பார்ப்பவர்களுக்கு ஒரு நல்ல அனுபவத்தை ஏற்படுத்துவது நிச்சயம்.

மேலும் உங்களுக்காக...