நான் தான் அவன அடித்தேன் என உண்மையை உடைத்த ஐஸ்வர்யா ரகுபதி! கேப்டன் மில்லர் பட விழாவில் நடந்த சர்ச்சை!

Published:

நடிகர் தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முழுவதுமாக முடிந்துள்ள நிலையில் இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. இதனால் படத்தின் போஸ்ட் ப்ரோமோஷன் வேலைகள் அசுர வேகத்தில் நிகழ்ந்து வருகிறது. மேலும் சமீபத்தில் படத்தின் ஆடியோ லான்ச் சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் மிகப் பிரமாண்டமாக நடந்துள்ளது. இந்த விழாவில் நடிகர் தனுஷ் மற்றும் சிவராஜ் குமார் என மொத்த படக்குழுவும் கலந்து கொண்டுள்ளது. விஜய் டிவியின் பிரம்மாண்ட தொகுப்பாளனி மற்றும் நடிகை டிடி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி உள்ளார்.சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இந்த திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் சந்தீப் கிஷன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கேன் என பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க உள்ளனர். மேலும் பீரியட் ஃபிலிம் ஆக உருவாக்கி வரும் கேப்டன் மில்லர் திரைப்படம் மூன்று பாகங்களாக வெளியாக இருப்பதாகவும் ஒரு சில தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும் இந்த படத்தின் ஆடியோ லாஞ்சிங் போது நடிகர் தனுஷ் இந்த படம் குறித்து சில வார்த்தைகளை பகிர்ந்துள்ளார்.

கேப்டன் மில்லர் திரைப்படத்தின் பிரம்மாண்ட விழாவின் பொழுது நடிகை ஐஸ்வர்யா ரகுபதிக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து விளக்கம் ஒன்றை அவரே வெளியிட்டுள்ளார். அதில் அந்தக் கூட்டத்தில் ஒரு நபர் என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார். அதற்கு நான் உடனே ரியாக்ட் செய்து விட்டேன். அவனைப் பிடித்து அடிக்கிற வரையும் அவனை எங்கேயும் போக விடவில்லை. அவன் என்னை தட்டி விட்டு ஓட முயற்சித்தான் அப்பொழுதும் அவனை விடாமல் அடித்தேன். என் கையை உதறிவிட்டு அவன் ஓட முயற்சித்தான் அவனால் ஒரு பெண் தன்னை பிடித்து அடிப்பதை மனதால் ஏற்றுக் கொள்ளும் தைரியம் சுத்தமாக இல்லை. மிகவும் கூச்சலிட்டு சத்தமாக அவனை அடித்து விட்டேன் என்னை சுற்றி மிக நல்ல மனிதர்கள் இருந்தார்கள்.

உலகத்தில் மரியாதைக்குரிய மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். ஆனால் அவர்களுக்கு மத்தியில் இது போன்ற சில மனிதர்களும் நம்முடன் பயணிக்கிறார் என நினைக்கும் பொழுது பயமாக இருக்கிறது. மேலும் ஐஸ்வர்யா ரகுபதி பல திரைப்பட விழாக்களை தொகுத்து வழங்கி உள்ளார். அதைத்தொடர்ந்து கேப்டன் மில்லர் திரைப்படத்திலும் சின்ன கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னதாக ஒரு பட விழாவில் நடிகர் கூல் சுரேஷ் ஐஸ்வர்யா ரகுபதிக்கு வலுக்கட்டாயமாக மாலை போட்டுவிட்டது மிகப்பெரிய சர்ச்சையாக சமூக வலைதளங்களில் வைரலானது. அதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து நடிகர் கூல் சுரேஷ் முறையாக மன்னிப்பும் கேட்டுள்ளார்.

நடிகர் பிரேம்ஜியை கரம் பிடிக்கும் பாடகி! தை மாதத்தில் திருமணத்திற்கு ரெடியாகும் ஜோடி!

கேப்டன் மில்லர் பட விழாவில் நிகழ்ச்சிகள் முடிந்ததும் முன் வரிசையில் உள்ள நடிகர் தனுஷை பார்ப்பதற்காக அந்த இடத்தில் கூட்டம் குவிந்தது. அந்த நேரத்தில் ரசிகர்களால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில்தான் ஐஸ்வர்யா ரகுபதிக்கு கூட்டத்திலிருந்து ஒருவரால் பாலியல் தொந்தரவு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த ஐஸ்வர்யா அந்த நபரை கையும் களவுமாக பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்பொழுது காட்டுத்தீ போல பரவி வருகிறது. அந்த வீடியோவில் அந்த நபருக்கு தர்ம அடி கொடுத்த ஐஸ்வர்யா அவரை காலில் விழ வைத்து மன்னிப்பு கேட்க வைத்துள்ளார். அதன் பின் அந்த நபர் ஓட முயற்சித்த பொழுதும் அவரை ஓட விடாமல் அடுத்தடுத்து தாக்கியுள்ளார்.

மேலும் உங்களுக்காக...