குக் வித் கோமாளி போட்டியாளர்களை குழப்பிய குழம்பு ரெசிபி இதுதானா??? வாழைப்பூ கோலா உருண்டை கெட்டி குழம்பு!

Published:

குக் வித் கோமாளி அனைவருக்கும் பிடித்தமான நகைச்சுவை கலந்த சமையல் நிகழ்ச்சியாகும். இந்த சமையல் நிகழ்ச்சியில் கடந்த வாரம் இறுதிச்சுற்றுக்கு தேர்வான போட்டியாளர்களுக்கு செலிப்ரேஷன் சுற்று நடைபெற்றது.

images 5 3 1

இந்தச் சுற்றின் டாஸ்க் ஆக போட்டியாளர்களுக்கு கன்ஃபியூஷன் ரூம் என்ற டாஸ்க் நடத்தப்பட்டது. இந்த டாஸ்கில் கன்பஃபியூஷன் அறையில்  ஒருவர் அமர்ந்து கோமாளிகளிடம் நடுவர்கள் கொடுத்த ரெசிபியை கோமாளிகளை குழப்பும் விதமாக கூறுவார். போட்டியாளர்களுக்கு அந்த ரெசிபியை பற்றி எந்தவிதமான குறிப்பும் தெரியாது. கோமாளிகள் அந்த ரெசிபியை கேட்டு மனப்பாடம் செய்து தங்களை தேர்வு செய்த போட்டியாளர்களிடம் கூறி அவர்களை சமைக்க செய்ய வேண்டும்.

cwc

 

இதில் நடுவர்களில் ஒருவரான செப் வெங்கடேஷ் பட் அவர்கள் கொடுத்த ரெசிபியானது பலருக்கும் என்ன என்றே புரியாத வண்ணம் இருந்தது. என்ன சமைக்கிறோம் என்று தெரியாமல் போட்டியாளர்கள் அனைவரும் குழப்பத்துடன் சமைத்த அந்த ரெசிபி தான் வாழைப்பூ கோலா உருண்டை கெட்டி குழம்பு! இது செட்டிநாட்டு பாரம்பரிய உணவாகும்.

துவர்ப்பு சுவை உடைய வாழைப்பூ உடலுக்கு அதிக அளவு நன்மைகளை தரக்கூடியது. குறிப்பாக பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்திட இந்த வாழைப்பூ மிகவும் உதவி புரியும். இந்த வாழை பூவினை கொண்டு செய்யும் இந்த உருண்டை குழம்பின் ரெசிபியை இப்பொழுது பார்க்கலாம்..!

என்னது? பூண்டில் பாயாசம் செய்யலாமா? குக் வித் கோமாளியில் செய்த முகாலயர் காலத்து பூண்டு பாயாசம்…!

images 5 2 1

வாழைப்பூ கோலா உருண்டை கெட்டி குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
  • வாழைப்பூ – ஒன்று
  • துவரம் பருப்பு – 50 கிராம்
  • பாசிப்பருப்பு – 50 கிராம்
  • கடலைப்பருப்பு – நான்கு ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் – ஒன்று
  • கடுகு – கால் ஸ்பூன்
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • எண்ணெய் – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு
  • பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
  • தேங்காய் துருவல் – அரை கப்
  • சோம்பு – ஒரு ஸ்பூன்
  • சீரகம் – அரை ஸ்பூன்
  • தக்காளி – ஒன்று
  • சின்ன வெங்காயம் – 50 கிராம்
  • மிளகாய்த்தூள் – ஒரு ஸ்பூன்
  • மல்லித்தூள் – இரண்டு ஸ்பூன்
  • பட்டை – சிறிய துண்டு
  • இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
  • மோர் – தேவையான அளவு
  • புளி – சிறிய எலுமிச்சை அளவு
வாழைப்பூ கோலா உருண்டை கெட்டி குழம்பு செய்யும் முறை:

முதலில் கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, துவரம் பருப்பு ஆகியவற்றை தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

வாழைப்பூவினை சுத்தம் செய்து மோரில் ஊற வைக்கவும்.

எலுமிச்சம் பழம் அளவு புளியினை எடுத்து தண்ணீரில் ஊற வைக்கவும்.

ஒரு மிக்ஸி ஜாரில் ஊற வைத்த பருப்பு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

அதனுடன் வாழைப்பூவினை பொடியாக நறுக்கி ஒரு வாணலியில் வதக்கி  சேர்த்துக் கொள்ளவும்.

தேவையான அளவு உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

இப்பொழுது இதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு இட்லி பாத்திரத்தில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.

அடுப்பில் மற்றொரு பாத்திரம் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து கடுகு, கறிவேப்பிலை சேர்க்கவும்.

சின்ன வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

இவை நன்கு வதங்கியதும் இதனுடன் தேங்காய், சோம்பு, சீரகம் சேர்த்து அரைத்த மசாலாவை சேர்க்கவும்.

ஊற வைத்த புளிக்கரைசலையும் இதனுடன் சேர்த்துக் கொள்ளவும்.

பின் மல்லி தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு ஆகியன சேர்த்து குறைந்த தீயில் வைத்து மூன்று முதல் நான்கு நிமிடங்கள் வதக்கவும்.

குழம்பு கொதித்ததும் ஏற்கனவே வேக வைத்த உருண்டைகளை இதனுடன் சேர்த்து இறக்கி விடவும்.

வாழைப்பூ கோலா உருண்டை கெட்டி குழம்பு தயார்!

மேலும் உங்களுக்காக...